பிள்ளையாருக்கு இந்த 2 பொருளைக் கொண்டு பூஜை செய்பவர்களுக்கு நல்ல திருமண வரன் சீக்கிரமே அமைவது உறுதி. திருமண வாழ்க்கையிலும் எந்த பிரச்சனையும் வராது.

pillaiyar1

நம்முடைய வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முக்கியமான அங்கம். சொல்லப்போனால் ஒருவருடைய வாழ்க்கையில் திருமணத்திற்குப் பிறகுதான் பலவிதமான திருப்புமுனைகள் உண்டாகும் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு திருமண பந்தத்திற்கு முக்கியத்துவம் உண்டு. ஒரு பெண்ணுக்கு நல்ல கணவர் அமைந்து விட்டால் அதை விட மிகப்பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை. ஒரு ஆணுக்கு நல்ல மனைவி கிடைத்துவிட்டால் அதைவிட பெரிய சந்தோஷம் வேறு எதுவும் கிடையாது. நீங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, உங்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை உங்களை புரிந்து கொண்டு, உங்களை அனுசரித்துக் கொண்டு, இறுதிவரை உங்கள் கரங்களை விடாமல், இல்லற வாழ்க்கையை தொடர நீங்கள் ஆன்மீக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

manjal-pillaiyar

மங்கள கரமான காரியம் சுபமாக முடிய வேண்டும். நல்லபடியாக முடிய வேண்டும் என்றால், மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது. குறிப்பாக யாருக்கு திருமணம் ஆகவில்லையோ, குறிப்பிட்ட அந்தப் பெண் அல்லது ஆணின் கையாலேயே சுத்தமான மஞ்சளில், கொஞ்சமாக பன்னீர் ஊற்றி குழைத்து மஞ்சள் பிள்ளையாரை பிடித்து ஒரு தாம்பாளத் தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிள்ளையாருக்கு குங்கும பொட்டும் அருகம்புல்லும் அவசியம் தேவை.

அடுத்தபடியாக கொஞ்சமாக பச்சரிசி எடுத்துக்கொண்டு, அதில் மஞ்சள் தூள் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து அட்சதையை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் குங்குமம், ஒரு கிண்ணத்தில் அட்சதை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முறை அட்சதையால், ஒரு முறை குங்குமத்தால் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

atchathai

அர்ச்சனை செய்யும் போது உங்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்ற வேண்டுதலையும், விநாயகப் பெருமானிடம் வைக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த விநாயகப் பெருமானின் மந்திரத்தை உச்சரித்து விட்டு, இந்த பூஜையை தொடங்கலாம். ஆனால் இந்த அர்ச்சனை செய்யும்போது, நிச்சயம் உங்கள் மனதிற்குள் உங்களது வாழ்க்கை துணை எப்படி அமைய வேண்டும் அந்த வேண்டுதலை வைத்துதான் அந்த குங்குமத்தையும் அச்சத்தையும் விநாயகரின் மேல் போட வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை கோடீஸ்வரி ஆக இருக்க வேண்டும். கோடிஸ்வரனாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை தவிர்த்து அவர்களுடைய குணாதிசயம் எப்படி இருக்கவேண்டும் உங்களுடைய வாழ்க்கை எப்படி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை வைப்பதே மிகவும் சிறப்பானது. 11 முறையிலிருந்து 108 முறை உங்களால் எத்தனை முறை முடியுமோ, உங்களுக்கு எவ்வளவு நேரம் உள்ளதோ அந்த அளவிற்கு இந்த அர்ச்சனையை செய்யலாம்.

உங்களுக்கு நீண்ட நாட்களாக திருமண வரன் அமையாவிட்டாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது தற்சமயம் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நல்ல வரன் அமைய வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கணவன் மனைவி பிரிந்து இருந்தாலும், ஒன்று சேர்வதற்கு இந்த பரிகாரத்தை செய்யலாம்.

marriagel

எப்போதுமே குடும்பத்தில் சண்டை சச்சரவு கணவன் மனைவிக்குள் வந்துகொண்டே இருக்கிறது என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம் நிச்சயம் நல்ல பலனை விரைவாகவே உங்களால் உணர முடியும். இந்த பரிகாரத்திற்க்கு நாட்கள், கிழமை எல்லாம் கணக்கு இல்லை. உங்களுடைய பிரச்சனை தீரும் வரை விநாயகப் பெருமானை நினைத்து உங்கள் வீட்டிலேயே வழிபாடு செய்து வாருங்கள்.

இதையும் படிக்கலாமே
கோடிஸ்வர யோகத்தை தேடி நாம் செல்ல வேண்டாம். அந்த கோடியும் லட்சமும் நம்மைத் தேடிவர, இந்த 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, யாருக்கும் தெரியாமல் நம் வீட்டில் வைத்துக் கொண்டாலே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.