கடன் தொகை, திருடு போனவை மீண்டும் உங்களுக்கு கிடைக்க இதை செய்யுங்கள்

sevvai

அழகான இந்த பூமியில் நாம் பிறக்கின்ற போது எதையும் நாம் கொண்டு வருவதில்லை. அது போன்று நமது வாழ்நாள் முடிந்த பின்பும் எதையும் கொண்டு செல்ல போவதும் இல்லை. இதைப்பட்ட இந்த மனித வாழ்வில் பல அனுபவங்களை பெறுகிறோம். அதில் நாம் வாழ்ந்து முடியும் காலம் வரை நமக்கென்று செல்வம், சொத்துகள் இருப்பதில் தவறு ஏதும் இல்லை. நமக்கு உரியவையாக இருக்கும் இவற்றை சிலர் நம்மை ஏமாற்றி எடுத்துக்கொண்டு விடுகின்றனர். அதை நாம் திரும்ப பெறும் ஒரு தாந்திரீக வழிமுறையை இங்கு காணலாம்.

kadan-loan

அனைவருமே உறவினர்கள், நண்பர்கள் கொண்ட மனித சமுதாயத்தில் தான் வாழ்கிறோம். ஒவ்வொருவருக்குமே அவரின் உழைப்பிற்கேற்ற, தகுதிக்கேற்ற செல்வம்,சொத்து, பொருட்கள் போன்றவை இருந்தாலும், ஒரு சிலருக்கு ஏற்படுகின்ற பேராசை காரணமாக பிறரின் பணம், சொத்து, பொருட்கள் போன்றவற்றை ஏமாற்றி அபகரிக்கின்றனர். வேறு சிலர் அவற்றை கடனாக பெற்று திருப்பி தராமல் ஏமாற்றுகின்றனர். இத்தகைய சிக்கல்களை போக்க நமது முன்னோர்கள் கூறிய ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை இங்கு காணலாம்.

ஒரு வீட்டின் தெற்கு பகுதி வாஸ்து சாஸ்திர படி செவ்வாய் பகவான் ஆதிக்கம் செலுத்தும் திசையாக இருக்கிறது. செவ்வாய் பகவான் தீமைகளை அழிக்கின்ற நவகிரக நாயகன் ஆவார். உங்கள் வீட்டின் தெற்கு பகுதியில் ஒரு காலியான இடத்தில், ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் காலை 6.00 மணியில் இருந்து 7.00 மணிக்குள்ளாக 7 நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். பிறகு தூபங்களை கொளுத்தி, தீபங்களுக்கு ஆராதனை காட்டி உங்கள் குல தெய்வம் மற்றும் செவ்வாய் பகவானை மனிதில் நினைத்து வணங்க வேண்டும்.

sevvai

நமது முன்னோர்கள் நமக்கு அருளிய இந்த தாந்திரீக முறையை முழு நம்பிக்கையுடன் செய்து வந்தால் உங்களிடம் கடன் பெற்று ஏமாற்றியவர்களும், ஏமாற்ற முயல்பவர்களும் உங்களின் பணத்தை உங்களிடத்தில் சீக்கிரத்தில் வந்து கொடுப்பார்கள். உறவினர்கள் சொத்தில் உங்களுக்கான பாகத்தை தராமல் ஏமாற்றியது, கவனக்குறைவால் திருடு போன பொருட்கள் போன்றவையும் மீண்டும் உங்களிடம் வந்து சேரும் என்பது முன்னோர்களின் வாக்காகும்.

இதையும் படிக்கலாமே:
தரித்திர நிலை நீக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kodutha panam thirumba kidaika in Tamil. It is also called as Kadan thirumba pera in Tamil or Sothu prachanai in Tamil or Sevvai bhagavan valipadu in Tamil or Thirudu pona porul kidaikka in Tamil.