தரித்திர நிலையை நீக்கும் எளிய பரிகாரம்

pariharam

மனிதர்கள் எல்லோருமே முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கேற்ற வினைப்பயன்களை தங்களின் வாழ்வில் அனுபவிக்கின்றனர் என்பது சித்தி நிலை முடிந்த ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் முற்பிறவி கர்மாவை இப்போது அனுபவிக்கிறார்கள் என்று கருதினாலும், இப்பிறவியில் நன்மையான செயல்களை செய்தாலும் சிலர் தொடர்ந்து துன்பங்கள் அனுபவிக்கும் நிலையை நாம் காண்கிறோம். அப்படிப்பட்ட நபர்களுக்கு இறைவனின் அருள் இல்லாததே இத்தகைய துன்பங்களுக்கு காரணம். இத்தகைய பிரச்சனைகளை போக்க சுலபமான தாந்திரிக வழிமுறையை நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Lord vishnu

தங்களின் வீட்டில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்பட்டிருப்பவர்கள், தொடர்ந்த துரதிர்ஷ்டங்களை அனுபவிப்பவர்கள் ஒரு பௌர்ணமி அன்று நல்ல தரமான தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு சிறிது குங்குமத்தைப் பன்னீரால் கரைத்து, அதை வலது கை மோதிர விரலால் தொட்டு தேங்காயில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்தத் தேங்காயின் மேல் ஒரு சிகப்புத்துணியைச் சுற்றி, பின்னர் அத்தேங்காயை கொண்டு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தையும், வீட்டில் உள்ளவர்களையும் (தலையையும்) சுற்றி முடித்த பின்பு ஆறு அல்லது கடலுக்குச் சென்று செருப்பைக் கழற்றி விட்டு அந்நீர்நிலையில் வெறும் காலுடன் இறங்கி “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்கிற மந்திரத்தை என்று 11 தடவை ஜெபித்து, காக்கும் கடவுளாகவும், செல்வங்களை அருள்பவராகவும் இருக்கும் மஹாவிஷ்ணுவிடம் இல்லத்தில் துரதிர்ஷ்டம்,துன்பங்கள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக அருள் செய்ய வேண்டிக் கொண்டு அந்தத் தேங்காயை நீரில் போட்டு விட்டு வீடு திரும்ப வேண்டும்.

இந்த தாந்திரீக பரிகார முறையை முறையாக செய்பவர்களின் வீட்டில் வளங்கள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படாது. வீட்டை பீடித்திருக்கும் தரித்திர நிலை சீக்கிரத்தில் நீங்குவதை காணலாம். மேலும் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நிம்மதியான உணர்வை பெறுவார்கள். அனைவருக்கும் மன மகிழ்ச்சி உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
கார்த்திகை தீபம் வழிபட்டு முறை

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Valam tharum pariharam in Tamil. It is also called Maha vishnu valipadu in Tamil or Thanthiriga valipadu in Tamil or Pournami parihara pooja in Tamil or Veetil nimmadhi peruga in Tamil or Veetil dharidhram neenga in Tamil.