கையில் பணம் இருக்கிறது, ஒருவர் அவசரம் என்று கேட்கிறார் ,கேட்டவுடனே நம் மனம் தாளாமல் அந்த பணத்தை கொடுக்கிறோம். கொடுத்த பணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று நினைக்கும் பொழுது வாங்கியவர்கள் அதை திருப்பி தர முடியாத சூழ்நிலையிலோ அல்லது தர விரும்பாத நிலையிலோ இருக்கும் பட்சத்தில் நாம் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க
கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் பணத்தை கொடுத்துவிட்டு அது கைக்கு வராமல் பலரும் பலவிதமான முறைகளில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிலரால் இந்த விஷயத்தை வெளியில் கூட சொல்ல இயலாமல் இருக்கும். அந்த அளவிற்கு யாருக்கும் தெரியாமல் உதவி செய்து மாட்டிக் கொண்டு விழிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தையும் யாருக்கும் தெரியாமல் ஒரே ஒருமுறை செய்தால் போதும். எப்படி பணத்தை கொடுத்தார்களோ அதே போல் பணம் அவர்களை தேடி வந்துவிடும்.
இந்த பரிகாரத்தை சுபமுகூர்த்த நாளாக பார்த்து செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு கோமதி சக்கரம் வேண்டும். 11 என்ற எண்ணிக்கையில் கோமதி சக்கரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். புதிதாக வாங்கிய கோமதி சக்கரமாக இருக்கும் பட்சத்தில் அதை கங்கா ஜலத்தில் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அருகில் அரசமரம் இருக்கக்கூடிய இடத்திற்கு இந்த கோமதி சக்கரத்தை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அரசமரத்தடியில் சற்று ஆழமாக ஒரு பள்ளத்தை நோண்டி அதற்குள் ஒவ்வொரு கோமதி சக்கரமாக உள்ளே வைக்க வேண்டும்.
அவ்வாறு வைக்கும் பொழுது யார் உங்களுக்கு பணத்தை திருப்பி தர வேண்டுமோ அவரின் பெயரை கூறி அவர் விரைவிலேயே பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று கூறிக் கொண்டே வைக்க வேண்டும். இப்படி 11 கோமதி சக்கரத்தையும் வைக்கும் பொழுது 11 முறை அவரின் பெயரை கூறி அவர் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு மண்ணை போட்டு மூடிவிட்டு அந்த இடத்தை தொட்டு வணங்கி விட்டு வீடு திரும்ப வேண்டும். அவ்வளவுதான் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவிலேயே நாம் கொடுத்த பணம் நம்மை வந்து சேரும். இந்த பரிகாரத்தை என்றைக்கு செய்கிறோமோ அன்றைக்கு காலை 10 மணிக்குள் செய்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: பித்ரு தோஷம் நீக்கும் அமாவாசை
எவ்வளவு முயற்சி செய்தும் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்கள் ஒரே ஒருமுறை மட்டும் இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு செய்ய விரைவிலேயே அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.