பணமோ, பொருளோ, நகையோ எதுவாக இருந்தாலும் ஒருவருக்கு கஷ்ட காலம் என்று வரும் பொழுது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் உதவி செய்வார்கள். அந்த உதவியை தவறுதலாக எடுத்துக் கொண்டு அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி விட்டு திருப்ப தராமல் இருப்பவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு பணத்தை திரும்ப தருவதற்குரிய சூழ்நிலை ஏற்படாமல் இருக்கும். எப்படிப்பட்ட நிலையாக இருந்தாலும் அந்த நிலை மாறி கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதற்கு பைரவரை வழிபடும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தீப வழிபாடு
கால பைரவர் என்பவர் எதிரிகளின் தொல்லைகளை நீக்க கூடியவர். நமக்கு யார் ஒருவர் பிரச்சினைகள் செய்கிறார்களோ அந்த பிரச்சினைகள் நீங்குவதற்குரிய வழியை காட்டக் கூடியவராக தான் காலபைரவர் திகழ்கிறார். அதனால்தான் காலபைரவரை பலரும் எதிரிகள் தொல்லை நீங்கவும், சனி தோஷம் நீங்கவும், கடன் பிரச்சினை தீரவும்,, திடீர் விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும் வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நாம் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கு பைரவரை வழிபடும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாடு என்பது பலரும் பின்பற்றி வரும் வழிபாடாகவே திகழ்கிறது. கால பைரவரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது ராகு காலமே. அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் வரும் ராகு காலத்தை தேர்வு செய்து பைரவர் வழிபாட்டை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது.
இதற்கு ஒரு வெள்ளை நிற சதுரமான துணியை எடுத்துக் கொண்டு அதில் 27 என்ற எண்ணிக்கையில் வால்மிளகை வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த 27 என்பது நட்சத்திரங்களின் எண்ணிக்கையை குறிப்பிடுகிறது. இப்பொழுது இதை மூட்டையாக கட்டிவிட்டு அருகில் இருக்கக்கூடிய சிவன் ஆலயத்தில் இருக்கக்கூடிய காலபைரவரின் சன்னதிக்கு முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி இந்த மூட்டையை அதற்குள் வைத்து விட வேண்டும்.
பிறகு இந்த மூட்டையை திரியாக பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றிய பிறகு இந்த தீபத்தை சுற்றி குங்குமத்தால் ஒரு வட்டத்தை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு கால பைரவரிடம் உங்களுடைய பிரச்சினை என்னவோ, வேண்டுதல் என்னவோ அதை மனதார கூறிவிட்டு காலபைரவரை மூன்று முறை வலம் வர வேண்டும்.
இப்படி தொடர்ந்து 27 ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ச்சியாக வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் கொடுத்த பணமோ, நகையோ, பொருளோ எதுவாக இருந்தாலும் அது திரும்பி கிடைப்பதோடு அவர்களுடைய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் முன்னேற்றம் பெற மந்திரம்
மிகவும் எளிமையான இந்த காலபைரவர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதில் எந்தவித பிரச்சினைகளும் இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.