கொடுத்த பணம் திரும்பி வரவில்லையா? வாங்கியவரே கொண்டு வந்து கொடுக்க! செவ்வாய்க்கிழமையில் இந்த மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள் போதும்.

bairava-money

நாம் என்ன தான் பணம் சம்பாதித்தாலும், அதன் மூலம் மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் நாம் பணமாக ஒருவருக்கு கொடுக்கும் பொழுது நிறைய பிரச்சனைகள் வந்து சேரும். நம்மிடம் உதவி கேட்கும் பொழுது அவர்களுக்கு இருக்கும் சூழ்நிலை வேறாக இருக்கும். அதை நம்பி நாமும் பரிதாபப்பட்டு பணம் கொடுத்து விடுவோம். ஆனால் அதைத் திரும்பப் பெறுவதற்கு நாம் படாதபாடு பட வேண்டி இருக்கும். இதோ தருகிறேன், அதோ தருகிறேன், பிறகு தருகிறேன் என்று ஏதாவது ஒரு காரணம் கூறி இழுத்தடித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களை எல்லாம் குற்றமும் சொல்ல முடியாத நிலையில் இருப்போம்.

money

அவர்கள் வேறொரு ஒரு விஷயத்தில் சிக்கி இருக்கலாம். அல்லது கொடுக்க முடியாத சூழ்நிலையிலும் இருக்கலாம். அதன் காரணமாக நாம் ஒரு சில காலம் வரை பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஒரு அளவிற்கு மேல் பொறுத்து பார்த்தால் நமக்கு அவர்கள் மேல் கோபம் வந்து விடுவதுண்டு. பணமும் கொடுத்துவிட்டு, கெட்ட பெயரும் எடுக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகிவிடும். இதுவும் கர்மவினை பயனாகத் தான் சாத்திரம் கூறுகிறது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் வேறு ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் பொழுது அதை மீட்டெடுக்க எளிய மந்திரம் உண்டு. என்ன மந்திரம் என்பதை இப்பதிவில் இனி நாம் காணலாம்.

செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டும். செவ்வாய் ஹோரை எந்த நேரத்தில் வருகிறது என்று உங்கள் நாள்காட்டியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யும் முன்னர் குளித்து தயாராக இருந்து கொள்ளுங்கள். அரிசியை அட்சதையாக தயார் செய்து கொள்ளுங்கள். அதில் சம அளவு எள்ளை கலந்து கொள்ளுங்கள். எள் கருப்பாக இருந்தாலும் சரி, வெள்ளையாக இருந்தாலும் சரி எதுவாயினும் பரவாயில்லை.

atchathai

இக்கலவையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு செல்லுங்கள். யாரிடம் இருந்து உங்களுக்கு பணம் வர வேண்டி இருக்கிறதோ அவர்களின் பெயரை சூரியனை பார்த்து மூன்று முறை உச்சரித்து தூவி விடவும். பின்னர் கீழே வந்து பூஜை அறையில் அமர்ந்து கொண்டு கீழ்வரும் மந்திரத்தை 21 முறை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்:
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!

bairavar

இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். நிச்சயம் பலன் தரும் எளிய மந்திரமாக இருக்கிறது. நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையில் இருந்தாலும், உடனடியாக உங்கள் பணம் திரும்ப கிடைக்கும். முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு வட்டிக்கு பணம் வாங்கி வட்டி விடுபவர்கள், இருக்கிற பணத்தை என்ன செய்வது என்று தெரியாது ஸ்பீடு வட்டிக்கு கடன் தருவது, அடுத்தவரின் தகுதி அறியாது கடன் கொடுப்பது மிகவும் தவறான ஒரு விஷயமாகும். இதனால் பாதிக்கப்படுவது நீங்களுமாக தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நியாயமான முறையில் பணம் சம்பாதித்து மீண்டும் அது திரும்ப கிடைப்பதில் சிக்கல்கள் இருந்தால் நிச்சயம் இந்த பரிகாரம் செய்வதன் மூலம் பலனடைவீர்கள்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் சுபிட்சமானது நிலையாக, நிறைவாக இருக்க, இன்று மாலை இந்த பூஜையை செய்ய தவறாதீர்கள்! வருடத்திற்கு 1 முறை வரும் இந்த அற்புத நாளில் சொல்ல வேண்டிய அற்புதமான மந்திரம்!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kodutha kadan thirumba pera. Kodutha panam thirumba kidaika. Kodutha panam thirumba vara Tamil. Vara kadan Tamil. Varatha panam vara.