Virat Kohli : சதமடித்த கவாஜாவை ஆவேசத்துடன் வெளியேற்றிய கோலி. கோவத்தினை கடுமையாக வெளிப்படுத்தினார் – வைரல் வீடியோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் 2-2 என்று தொடரில் சமநிலையில் உள்ளது. தொடரின் முடிவு இந்த போட்டியின் முடிவில் தெரியும்.

Toss

ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுய பின்ச் மற்றும் கவாஜா சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். கவாஜா இந்த போட்டியில் சதமடித்தார். சதமடித்த உடனே புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

அந்த கேட்ச் பிடித்தவுடன் கோலி கோபத்துடன் பந்தை ஓங்கி தரையில் அடித்து கோபத்துடன் கவாஜாவை வெளியேற்றினார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 272ரன்களை குவித்தது. தற்போது 273 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து இந்திய அணி விளையாட தயாராகி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

Shami : தோனியை தொடர்ந்து வீட்டிற்கு அழைத்து இந்திய வீரர்களுக்கு விருந்து வைத்த அடுத்த வீரர் – யார் தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -