பும்ரா பந்துவீச்சை நானே எதிர்கொள்ள அஞ்சுவேன் – பிரபல இந்திய வீரர்

bumrah

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து அபார அணி இந்த இதனை தொடரில் (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் சிட்னி நகரில் அடுத்து நடக்க விருக்கும் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி மெல்போர்ன் நகரில் இருந்து கிளம்பி சிட்னி நகரை அடைந்தது.

team

இந்நிலையில் பேட்டி ஒன்றினை அளித்த கோலி : ஆஸ்திரேலிய மைதானங்கள் முற்றிலும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது. அதனை இந்த தொடரில் நாம் பார்த்தோம் பந்தின் வேகம் மற்றும் சீறும் சத்தம் மற்றும் அதிகப்படியான பவுன்ஸ் போன்றவகைள் இந்த தொடரில் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியது. இது போன்ற ஆடுகளங்களில் ரன் குவிப்பது சற்று கடினம்.

மேலும் கொஞ்ச நேரம் காலத்தில் தாக்கு பிடித்து மைதானத்தின் தன்மையினை உணர்ந்தால் தான் நாம் பந்துகளை முழுமையாக எதிர்கொள்ள முடியும். மேலும் இது போன்ற ஆடுகளங்களில் பும்ரா பந்துவீசினால் நிச்சயம் என்னால் எளிதாக எதிர்கொள்ள முடியாது. அவரின் வேகம் மற்றும் பந்துவீசும் முறையினை கணிப்பது எனக்கு கொஞ்சம் சவாலாகவே இருக்கும். எனவே இது ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் நான் நிச்சயம் பும்ரா வீசும் பந்துகளை எதிர்கொள்ள முடியாது என்று கூறினார்.

koli

இந்த தொடரில் ஒரு சதம் விளாசி இருக்கும் கோலி சிட்னி போட்டியில் சதமடித்து புத்தாண்டை துவங்குவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு சிட்னி போட்டிக்காக காத்திருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக சுப்ரீம் பார்மில் இருக்கும் கோலிக்கு இந்த ஆண்டு எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணி பந்துவீச்சினை எதிர்த்து என்னால் ரன்களை குவிக்கமுடியும் – ஆஸி வீரர் சவால்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்