இந்திய அணி பந்துவீச்சினை எதிர்த்து என்னால் ரன்களை குவிக்கமுடியும் – ஆஸி வீரர் சவால்

labus-1

இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தற்போது 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. எனவே இந்திய அணி (2-1)என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

labus

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணியில் புதிதாக மார்னஸ் லாபஸ்சாக்னே என்கின்ற ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து ஆல்ரவுண்டரான இவர் கடந்த பாகிஸ்தான் தொடரில் அறிமுகம் ஆனார் . பிறகு அணியின் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

தற்போது மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பதால் இதை பயன்படுத்தி உலகத்தரம் வாய்ந்த இந்திய அணி பந்துவீச்சினை ஏந்திக்கொண்டு ரன்களை குவிப்பேன் என்று சவால் விடுத்துள்ளார். மேலும் தற்போது உள்ள இந்திய அணி பவுலிங் சிறப்பாக உள்ளதாகவும், அதனை எதிர்கொண்டு என் திறமையினை நிரூபிப்பேன் என்றும் சூளுரைத்தார்.

labus 1

ஏற்கனவே இரண்டு வெற்றிகளை பெற்ற இந்திய அணி முழு பலத்துடன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் கோலி வெற்றியை தொடருவோம் என்று ஏற்கனவே பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே :

சிட்னியில் இருந்து கிளம்பிய கோலி! எங்கு செல்ல போகிறார்? என்ன செய்ய போகிறார்?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்