இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட்-க்கு முன்னுரிமை கிடையாது. இவருக்கே வாய்ப்பு அளிக்கப்படும் – இந்திய தேர்வுக்குழு தலைவர்

prasad

இந்திய அணி பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகளில் தற்போது இளம் வீரரான ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடித்து ஆடிவருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன பண்ட் அந்த தொடரில் சதமடித்து அசத்தினார்.

அதனால், அடுத்தடுத்த தொடர்களில் பண்ட்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை சரியாக பயன்படுத்தி கொண்ட பண்ட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் சதமடித்து தனது இடத்தினை உறுதிசெய்தார். இந்நிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான பிரசாத் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் பிரசாத் கூறியதாவது : இந்திய டெஸ்ட் அணியில் இனிமேல் பண்ட்க்கு முன்னுரிமை வழங்கப்படாது. இந்திய அணியில் சஹா காயமடைந்ததுக்கு பதிலாக பண்ட் இடம்பிடித்தார். இந்திய அணியில் பண்ட் இடம்பெறாத வரையில் அணியில் நிரந்தர விக்கெட் கீப்பராக இருந்தவர் சஹா அவர் அதுவரை நம்பர் 1 வீரராக இருந்தார்.

saha

இந்நிலையில், தற்போது சஹா காயத்திலிருந்து முழுமையாக குணமாகி உள்ளதால் அவருக்கே அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தெரிவித்தார்.
எனவே, தற்போது பண்ட்டின் இடத்திற்கு ஆபத்து வந்துள்ளது.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் அனைத்து ஆட்டங்களும் 300 ரன்களுக்கு மேலு குவித்து இந்த அணி வெற்றி பெரும் – டிராவிட்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்