தோனியின் மெதுவான பேட்டிங் குறித்த கருத்தினை பற்றி பேசிய கோலி – பதிவு உள்ளே

இன்று (12-01-2019) சிட்னியில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இந்த வித்தியாசத்தில் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரை (1-0) என்ற கணக்கில் வெற்றியுடன் துவங்கி இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

lose-1

இதனை தொடர்ந்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் தவான் இன்னிங்க்ஸை துவங்கினர்.ஆரம்பத்திலே தவான் தனது விக்கெட்டினை ரன் எடுக்காமலே பறிகொடுத்தார். அடுத்து வந்த ரன் 3 ரன்களிலும் அம்பத்தி ராயுடு 0 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பிறகு தோனி மட்டும் ரோஹித் இணைந்து ஓரளவிற்கு நன்றாக ஆடினார்கள்.

தோனி 96 பந்துகளை 51 ரன்களை குவித்தார். இவரது மெதுவான ஆட்டமே தோல்விக்கு காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இதனை பற்றி இந்திய கேப்டன் கோலி அளித்த பேட்டி : 300 ரன்களை கூட இந்த மைதானத்தில் அடிக்கமுடியும். எனவே, இந்த இந்த இலக்கு எட்டக்கூடிய இலக்கு தான். ஆனால், துவக்கத்தில் நிறைய விக்கெட்களை இழந்துவிட்டோம்.

dhoni

ரோஹித் மற்றும் தோனி நன்றாகவே விளையாடினர். ரோஹித் அடித்து ஆடுகையில் தோனி அவருக்கு சிறப்பாக துணை நின்றார். தோனியின் இந்த இன்னிங்ஸ் சிறப்பான ஒன்றுதான். ஆனால், அவர் எதிர்பாராத நேரத்தில் அவுட் ஆகிவிட்டார். இல்லை என்றால் அவர் இந்த இன்னிங்க்ஸை வெற்றிகரமாக முடித்திருப்பார். என்று கோலி பேட்டியின் போது தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

விக்கெட்டை காத்துக்கொள்ள பல்டி அடித்து ஸ்டம்ப்பை நொறுக்கிய ரோஹித் – வைரலாகும் வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்