விக்கெட்டை காத்துக்கொள்ள பல்டி அடித்து ஸ்டம்ப்பை நொறுக்கிய ரோஹித் – வைரலாகும் வீடியோ

rohith-and-ms

இன்று (12-01-2019) சிட்னியில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இந்த வித்தியாசத்தில் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரை (1-0) என்ற கணக்கில் வெற்றியுடன் துவங்கி இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

rohith

இந்திய போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தது அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. ரோஹித் மட்டும் சிறப்பாக சதமடித்து 133 ரன்களை குவித்தார். தோனி மற்றும் ரோஹித் இணைந்து 137 ரன்களை குவித்தனர். குறிப்பாக இன்று வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் ஆடினார்.

அப்போது போட்டியின் நடுவே தோனி அடித்த ஒருபந்து பீல்டரின் கைக்கு நேராக செல்ல ரோஹித் ரன் ஓட முயன்றார். ஆனால், மறுமுனையில் இருந்த தோனி இந்த ரன் வேண்டாம் திரும்பி போ என்பது போல சைகை செய்தார். உடனே வேகமாக கிரீஸ் நோக்கி பாய்ந்த ரோஹித் பல்டி அடித்து ஸ்டம்பின் மீது விழுந்தார். ஸ்டம்ப் கேமரா மூலம் இது பதிவாகியுள்ளது. இதோ உங்களுக்காக அந்த இணைப்பு :

விக்கெட் விழவிடக்கூடாது என்பதை மனதில் நினைத்து இவர் அடித்த இந்த டைவ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் எவ்வளவோ முயன்றும் இந்திய அணியை தோல்வியில் இருந்து மீது எடுக்க முடியவில்லை. இவருடன் ஒருவர் பங்களிப்பு தந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிக்கலாமே :

தோனியை தூக்கா விட்டாலும் சரி. இவரை இந்திய அணியில் சேருங்கள் அப்போது தான் இந்தியா பலமடையும் – வாஹன் ட்வீட்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்