பிங்க் பேட் மற்றும் பிங்க் கிளவுஸ் உடன் களமிறங்கிய கோலி – உருக்கமான பின்னணி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (02-01-2019) சிட்னி நகரில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக அகர்வால் மற்றும் ராகுல் களமிறங்கினர். இறங்கிய வேகத்திலேயே 9 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார் ராகுல்.

pink 1

அதன் பிறகு புஜாராவும் அகர்வாலும் நல்ல அடித்தளத்தை அமைத்தனர். சிறப்பாக விளையாடிய அகர்வால் 77 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். வழக்கத்திற்கு மாறாக இன்று பிங்க் நிற பேட் மற்றும் பிங்க் கிளவுஸ் அணிந்தபடி அவர் மைதானத்திற்குள் வந்தார்.

அவர் அப்படி பிங்க் கலரில் பேட் மற்றும் கிளவுஸ் பயன்படுத்தியத்திற்கு பின்னணியில் ஒரு உருக்கமான செய்தி ஒன்று உள்ளது. அவர் அப்படி களமிறங்க காரணம் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத் நடத்திவரும் புற்றுநோய் பாதிக்க பட்ட குழந்தைகளுக்கான ட்ரஸ்ட்டிற்கு விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டவே அவர் அந்த பொருட்களை பயன்படுத்தினார்.

pink 2

மெக்ராத்தின் மனைவி புற்றுநோய் ஏற்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காகவே மெக்ராத் அந்த ட்ரஸ்டினை நடத்திவருகிறார். களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் கோலி இப்படிப்பட்ட செயலை செய்ததன் மூலம் ஆஸ்திரேலிய மக்களின் அன்பினை பெற்றுள்ளார். இதனை அந்நாட்டு மக்கள் வரவேற்றுள்ளனர்.

இதையும் படிக்கலாமே :

இறந்த தனது குருவினை தோளின் மீது சுமந்து சென்ற சச்சின் – புகைப்படம் உள்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்