இறந்த தனது குருவினை தோளின் மீது சுமந்து சென்ற சச்சின் – புகைப்படம் உள்ளே

achrekar

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (02-01-2019) சிட்னி நகரில் துவங்கியது. இரு அணிகளும் தேசிய கீதம் துவங்கியது. சமயத்தில் கருப்பு பட்டையினை அணிந்து கலந்து கொண்டனர்.நேற்று சச்சினின் இளம்வயது பயிற்சியாளராக அச்ரேக்கர் இயற்கை எய்தினார்.

sachin 1

அதன் காரணமாக அவரது மறைவினை அனுசரிக்கும் விதமாக இந்திய அணி கருப்பு பட்டை அணிந்து போட்டியில் பங்கேற்றதாக இந்திய அணி சார்பில் அறிக்கை வெளியிட்டது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது இரங்கலை அச்ரேக்கர் மறைவிற்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

மும்பையில் இறந்த அச்ரேக்கர் அவர்களின் இல்லத்திற்கு சென்று இறுதிச்சடங்கில் கண்ணீர் மல்க பங்கேற்றார். மேலும் தனது குருவான அச்ரேக்கரை தனது தொழில் சுமந்தபடி அவரது சடலத்தை சச்சின் எடுத்துச்சென்றார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

sachin

கிரிக்கெட் உலகில் சச்சின் இவ்வளவு புகழ் அடைய காரணமாக இருந்த அவர் சச்சினை போன்று பல்வேறு இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இதனை மறக்காத சச்சின் அவரின் இறுதிச்சடங்கில் அனைத்தையும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டது அனைவரையும் நெகிழச்செய்தது.

இதையும் படிக்கலாமே :

இடது கையில் கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய மற்றும் ஆஸி வீரர்கள் -காரணம் இதுதான்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்