ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலை இருந்தால் போதும். நீங்கள் மேக்கப் போட வேண்டிய தேவையே இல்லாத அளவிற்கு முகம் தேவதை போல ஜொலிக்கும்.

koiya leaf face pack tamil
- Advertisement -

கொய்யா இலை அழகு குறிப்பு

கொய்யா பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆப்பிள் பழத்தில் இருப்பதைவிட பல ஊட்டச்சத்துக்கள் இந்த கொய்யாப்பழத்தில் நிறைந்துள்ளன. பொதுவாக கொய்யா பழ மரத்தில் இருக்கின்ற அதன் இலைகளும் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவையாக உள்ளன. இந்த கொய்யா இலைகளை பயன்படுத்தி, பெண்கள் தங்களின் முக அழகை மேம்படுத்தி கொள்ள உதவும் சில எளிய அழகு குறிப்புகளை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

கொய்யா இலை பேஸ் பேக்

ஒரு கைப்பிடி அளவிற்கு கொய்யா இலைகளை பறித்து, சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இந்த கொய்யா இலைகளை போட்டு, அதனுடன் 5 டேபிள்ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் விட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு மிக்சி ஜாரில் இருக்கும் இந்த கொய்யா இலை பேஸ்டிலிருந்து 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொண்டு, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது இந்த கலவையை பெண்கள் தங்களின் முகம் முழுவதும் தடவிக் கொண்டு. ஒரு 20 நிமிடங்கள் வரை இந்த பேஸ் பேக் காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்த பிறகு, காய்ந்த டவலை கொண்டு முகத்தில் இருக்கும் ஈரத்தை லேசாக தொட்டு, தொட்டு எடுக்க வேண்டும். இப்படி மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் பெண்களின் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, முகப்பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகளும் நீங்கி முகம் அழகு பெறும்.

முகத்தில் அதீத எண்ணெய் படியும் பிரச்சனைகள் கொண்ட பெண்கள் கொய்யா இலைகளை பயன்படுத்தினால் நல்ல பலன் பெறலாம். ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலையோடு 5 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு இந்த கொய்யா இலை பேஸ்ட்டை எடுத்து ஒரு கப்பில் போட்டுக் கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது இந்த கலவையை பெண்கள் தங்களின் முகம் முழுவதும் தடவி விட்டு, ஒரு 30 நிமிடங்கள் வரை அப்படியே காய விட வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால், முகத்தில் எண்ணெய் வழிதல் நின்று, முகம் பளிச்சிடும் தோற்றத்தை பெறும். முடிந்தவரை பெண்கள் இந்த ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: செலவே இல்லாம உங்க முடியை ஸ்மூத்தா ஷைனா வச்சுக்க ட்ரெண்டிஙான ஐடியாவில் இதுவும் ஒன்று

ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலையோடு 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும். இப்பொழுது கெட்டியான பதத்தில் கொய்யா இலை பேஸ்ட் நமக்கு கிடைக்கும். இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் அப்ளை செய்து, ஒரு 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்ட பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவி சத்தம் செய்ய வேண்டும். இந்த ஃபேஸ் பேக் கருத்துப்போனே பெண்களின் முக சருமம் அதன் இயல்பான நிறத்தை பெற உதவும். குறிப்பாக கோடை காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த ஃபேஸ் பேக்கை பெண்கள் பயன்படுத்துவதால் அவர்களின் முகம் பளிச்சிடும் தோற்றத்தை பெறும்.

- Advertisement -