வறட்சியாக இருக்கக்கூடிய முடியை அதிக செலவு செய்து ஸ்ட்ரைட்னிங் ஸ்மூத்தனிங் என்று என்னென்னலாமோ செய்து கொள்கின்றோம். ஆனால் அவை அனைத்தும் ரொம்ப ரொம்ப காஸ்ட்லி. எல்லாம் செயற்கையாக கெமிக்கல் கலந்த ட்ரீட்மென்ட். இதையெல்லாம் செய்து கொண்டால் நம்முடைய முடி ஒரு சில நாட்களில் உதிர கூட வாய்ப்புகள் உள்ளது. ஆகவே இப்படிப்பட்ட ட்ரீட்மெண்ட்களை எல்லாம் செய்து கொள்வதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை விசாரிப்பது நல்லது. எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் நம்முடைய முடியை ஷைனாக வைத்துக்கொள்ள, இயற்கையான முறையில் நிறைய அழகு குறிப்பு உள்ளது. இன்று நாம் பார்க்கப்போவது டிரெண்டாக இருக்கக்கூடிய ஒரு அழகு குறிப்பு தான். செலவில்லாத ஒரு அழகு குறிப்பு. அதேசமயம் எந்த பக்க விளைவுகளும் இல்லாத அழகு குறிப்பு. அதைத் தெரிந்து கொள்வோமா வாருங்கள்.
முடியை ஷைனாக மாற்ற இயற்கையான வழி:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஓட்ஸ் 3 டேபிள் ஸ்பூன், ஆலோவேரா ஜெல் 1 டேபிள் ஸ்பூன், முட்டை 1, காய்ச்சாத பால் 1/4 கப், லெமன் ஜூஸ் 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் மொத்தமாக போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் மொழு மொழு என்று அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.
இந்த பேக்கோடு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து இதை உங்களுடைய முடியில் அப்ளை செய்ய வேண்டும். முடியின் மேல் பக்கத்திலிருந்து, கீழ்ப்பக்கம் வரை நீளமாகவே முடியை வைத்து, இந்த பேக்கை ஸ்மூத்தாக மேலிருந்து கீழே பார்த்தவாறு அப்ளை செய்து அப்படியே 20 நிமிடம் விட்டு விட வேண்டும். அதன் பின்பும் மயில்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துப் பாருங்கள். உங்கள் முடி சூப்பராக சில்க்கியாக சைனிங்காக மாறிவிடும். முடியில் இருக்கும் வறட்சித் தன்மை குடையும். சிக்கு பிடிக்காது. முடியில் ஈரத்தன்மை அதிகரிக்கும். முடி உதிர்வும் குறைய தொடங்கும்.
வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வர உங்களுடைய முடி வேற லெவல் அழகா மாறிடும். கடையில் நிறைய காசு கொடுத்து ஸ்மூத்தனிங் செய்து கொள்கிறார்கள் அல்லவா. அந்த அளவுக்கு அழகு உங்களுடைய முடிக்கும் கிடைக்கும். இந்த ஹேர் ஸ்மூத்தனிங் பேக்கில் நமக்கு இன்னொரு நன்மையும் இருக்கிறது. முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்க கூடிய அலோவேரா ஜெல், முட்டை எல்லாவற்றையும் சேர்த்து இருக்கின்றோம். ஆகவே உங்களுடைய முடியும் போஷாக்குடன் அடர்த்தியாக ஷைனிங்காக வளரும்.
இந்த ஹேர் பேக் போடுவதோடு சேர்த்து போஷாக்கு நிறைந்த ஒரு ட்ரிங்கையும் தினமும் காலையில் குளித்து வாருங்கள். டீ காபிக்கு பதிலாக இந்த ட்ரிங்க்கை நீங்கள் குடிக்கலாம். காலை குடிக்க முடியாதவர்கள் எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது குடியுங்கள். முடி வளர்ச்சிக்கு இந்த ஜூஸ் ரொம்பவும் உதவியாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: சுருக்க சுருக்கமா இருக்க உங்க சருமத்தை இஸ்திரி செய்தது போல அழகாக மாற்ற வேண்டுமா? பட்டுன்னு 10 வயசை குறைக்க பழுத்துப் போன ஒரு தக்காளியை கையில் எடுங்க போதும்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய பீட்ரூட், நறுக்கிய கேரட், நறுக்கிய வெள்ளரிக்காய், சின்ன துண்டு இஞ்சி, இந்த நான்கு பொருட்களையும் போட்டு 1 பெரிய கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிளாஸில் வடிகட்டி லெமன் ஜூஸ் 1 ஸ்பூன் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு போட்டு கலந்து குடித்து விடலாம். கேரட் பீட்ரூட் வெள்ளரிக்காய்வைகளை சம அளவுகளில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தாலே ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டால், அது ஒரு சில நாட்களில் குறைய தொடங்கும். உங்களுக்கு பயனுள்ள இந்த இரண்டு அழகு குறிப்புகளும் பிடித்திருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.