டிராவிட்டின் இந்த சாதனையை தகர்க்க காத்திருக்கும் கோலி.!

koli

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் “ரன் மெஷின்” கேப்டன் கோலி புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்த உள்ளார். பொதுவாக வெளிநாட்டு ஆடுகளங்களில் பந்து அதிக வேகத்தில் தாறுமாறாக பவுன்ஸ் ஆகும். இது போன்ற ஆடுகளங்களில் இந்திய அணியின் வீரர்கள் சற்று தடுமாறத்தான் செய்கிறார்கள்.

koli 2

ஆனால், கோலி எந்த நாட்டில் விளையாடினாலும் அந்த பிட்சின் தன்மையினை சரியாக புரிந்து விளையாடுவார் .எனவே அவரால் தொடர்ந்து வெளிநாட்டு மைதானங்களில் ரன்களை குவிக்க முடிகிறது. இந்த வருடம் நடைபெற்ற அனைத்து வெளிநாட்டு டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் கோலி சதம் அடித்துள்ளார்.அவரின் ஆட்டம் வேற பார்மில் உள்ளது.

தொடர்ந்து சதங்களை விளாசி வரும் கோலி இந்த ஆண்டு வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் மட்டும் 1056 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் வெளிநாட்டு மைதானங்களில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் 2வது இடத்தில உள்ளார். முதலிடத்தில் இந்திய அணியின் முன்னர் வீரர் டிராவிட் 1137 ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

koli 1

டிராவிடின் இந்த சாதனையை முறியடிக்க இன்னும் 82 ரன்கள் மட்டுமே கோலிக்கு தேவை. தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 82 ரன்களை அடித்து தாண்டினால் அவர் முதலித்தில் வருவார். அவரது சாதனை பட்டியலில் இன்னொரு சாதனை இணையும். இதுவரை சர்வதேச போட்டிகளில் கோலி பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்