சாதாரண இட்லியை சத்தான இட்லியாக மாற்றுவதற்கு இட்லி மாவு அரைக்கும் போது அதோட கொஞ்சம் இந்த பொருளையும் சேர்த்து அரைங்க…

kolly idly
- Advertisement -

இட்லி என்பது நம்முடைய தென்னிந்திய பாரம்பரிய உணவாக கருதப்படுகிறது. காலை நேர உணவு என்று நினைத்தவுடன் இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி என்பது தான் ஞாபகத்திற்கு வரும். அனைத்து தென்னிந்திய உணவகங்களில் இட்லி இல்லாமல் இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட இட்லியை நம் வீட்டில் செய்வதற்கு இட்லி மாவு அரைக்கும் போது எந்த பொருளை சேர்த்தால் இன்னும் கூடுதல் சத்தான இட்லியை பெற முடியும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

இட்லி எளிதில் ஜீரணமாக கூடிய ஒரு உணவு என்பதால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது. அறுவை சிகிச்சை முடித்தவர்களுக்கு கூட முதலில் சாப்பிட கொடுக்கும் உணவாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது இட்லியும் இடியாப்பமும் தான். அப்படி எளிதில் ஜீரணமாக கூடிய இந்த இட்லியை சத்தான இட்லியாக மாற்றுவதை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • இட்லி அரிசி – 3 கப்
  • கொள்ளு – 1 கப்
  • உளுந்து – 1 கப்
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்.

செய்முறை

இட்லி அரிசியை சுத்தம் செய்து நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அதேபோல் கொள்ளு, உளுந்து, வெந்தயம் மூன்றையும் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி கழுவி அதையும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது ஆறு மணி நேரம் இவை அனைத்தும் கூற வேண்டும்.

பிறகு எப்பொழுதும் போல் கிரைண்டரில் கொள்ளு, உளுந்து, வெந்தயம் மூன்றையும் போட்டு நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரிசியை போட்டு அதையும் நன்றாக அரைத்து அந்த பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு போட்டு கையை வைத்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு எட்டு மணி நேரம் புளிக்க விட வேண்டும்.

- Advertisement -

நன்றாக புளித்த பிறகு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு இட்லி தட்டில் மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் எடுத்து வைத்து மூடி விட வேண்டும். பத்து நிமிடம் இதை மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு இட்லியை இட்லி தட்டில் இருந்து எடுத்து விடலாம்.

இதே மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து விட்டு தோசை ஊற்றினால் கொள்ளு தோசை தயாராகிவிடும். அரிசி, உளுந்து, வெந்தயம் இவை எதுவுமே சேர்க்காமல் வெறும் கொள்ளை ஊற வைக்காமல் அப்படியே கழுவி ஆட்டி எடுத்து புளிக்கவும் வைக்காமல் நேரடியாக இட்லி தட்டில் ஊற்றி இட்லியும் செய்யலாம்.

- Advertisement -

கொள்ளில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு கொள்ளு பெருந்துணை புரிகிறது. மேலும் உடல் வலிமை பெறுவதற்கு கொள்ளு நமக்கு உதவுகிறது. இவ்வாறு மாதத்திற்கு ஒருமுறை கொள்ளு இட்லியோ அல்லது கொள்ளு தோசையோ செய்து நம் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களை அறியாமல் சத்தான உணவை உண்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே: சப்பாத்தி மாவு பிசையும் போது இந்த 1 பொருளை மட்டும் சேருங்க போதும். லேயர் லேயராக சப்பாத்தியை சொடக்கு போடும் நேரத்தில் சுட்டு அடுக்கி விடலாம்.

எப்பொழுதும் நாம் அரைக்கும் இட்லி மாவில் சிறிதளவு கொள்ளை மட்டுமே சேர்த்து மிகவும் சத்தான இட்லி மாவை நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிப்போம்.

- Advertisement -