உடல் எடை குறைய 1 டம்ளர் கொள்ளு சூப் தினமும் இப்படி குடித்து வந்தால் போதும். 30 நாட்களில் அடையாளம் தெரியாமல், ஒல்லியாக அழகா மாறிடுவீங்க.

soup
- Advertisement -

நம்முடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையைக் குறைத்து உடல் தோற்றத்தை அழகாக மாற்றக் கூடிய பொருள் தான் இந்த கொள்ளு. மிக மிக சுலபமான முறையில் கொள்ளு சூப் எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தினமும் காலையில் எழுந்தவுடன் டீ காபிக்குப் பதில் இந்த சூப்பை குடித்தால் 30 நாட்களில் உடல் எடையில் நல்ல வித்தியாசத்தை காணலாம்.

அடுப்பில் ஒரு அடி கனமான கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் 200 கிராம் கொள்ளு போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.  கொள்ளு வறுபட்டு படபடவென பொரிந்து வரவேண்டும். நன்றாக வறுபட்ட கொள்ளை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துவிடுங்கள். ஆறிய கொள்ளை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடித்து ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் இந்த கொள்ளுப் பொடி இரண்டு மாதம் வரை கெட்டுப் போகாது. இந்த கொள்ளு பொடியை வைத்து சூப் செய்வது எப்படி.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 300ml அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் 1 1/2 ஸ்பூன் அளவு நாம் அரைத்து வைத்திருக்கும் கொள்ளுப்பொடி, நசுக்கிய பூண்டுப்பல் 1, சீரகம் 1/4 ஸ்பூன், உப்பு இரண்டு சிட்டிகை, இந்த பொருட்களை எல்லாம் போட்டு தண்ணீர் நன்றாகக் கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, 6 லிருந்து 7 நிமிடங்கள் வரை இந்த தண்ணீரை கொதிக்க வையுங்கள்.

அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு, இந்த சூப்பை வடிகட்டி, கால் ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து, கலந்து வெதுவெதுப்பாக இருக்கும்போது காலையில் வெறும் வயிற்றில் குடித்து விட வேண்டும். தினம்தோறும் இந்த சூப்பை குடித்து வர உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் வெளியேறி உடல் எடை படிப்படியாக குறையத் தொடங்கும். 30 நாட்கள் தொடர்ந்து இந்த கொள்ளு சூப்பை குடித்து பாருங்கள். வித்தியாசம் உங்களுக்கு தெரியும்.

- Advertisement -

கொள்ளு உடலுக்கு கொஞ்சம் சூட்டை கொடுக்கக்கூடியது. உங்களுக்கு உடல் சூடு அதிகமாக இருந்தால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்தில் மூன்று நாள் இந்த கொள்ளு சூப்பை குடிப்பது நல்லது. உடல் எடை அதிகமாக இருக்கிறது சீக்கிரம் குறைக்க வேண்டும். பக்கவிளைவுகள் ஏற்படக் கூடாது என்றவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள்.

குறிப்பு: உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கிறது. தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களாக இருந்தால் இந்த குறிப்பை பின்பற்றுவதற்கு முன்பு உங்களுடைய மருத்துவரை அணுகுவது நல்லது. கொள்ளை இப்படித்தான் சூப் வைத்து குடுடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொள்ளு கிரேவி, கொள்ளு இட்லி பொடி, கொள்ளு சுண்டல், என்று கூட விதவிதமாக சுவையாக சமைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

- Advertisement -