தினமும் காலையில் எழுந்ததும் பால் பாக்கெட்டை கத்தரித்து இதை செய்த பிறகு பயன்படுத்தினால் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்குமாம் தெரியுமா?

gomatha-milk
- Advertisement -

இந்து சாஸ்திரங்களில் பாலை கொடுக்கும் பசுவிற்கு இணையான ஒரு தெய்வம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோமாதா என்று அழைக்கப்படும் இந்த பசுவின் உடல் முழுவதும் முக்கிய தெய்வங்களும், தேவாதி தேவர்களும் அடங்கியுள்ளார்கள். ஒரு மனிதன் தாய்ப்பாலை விட, பசும்பாலை தான் தன் வாழ்நாளில் அதிகம் பருகி வளர்கிறான். இத்தகைய மகத்துவங்கள் நிறைந்த பாலை காலையில் எழுந்ததும் முதல் வேலையாக செய்ய வேண்டியது என்ன? இதனால் உண்டாகக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வீட்டின் பூஜை அறையில் இருக்க வேண்டிய ஒரு முக்கிய தெய்வம் ‘கோமாதா’. கோமாதா சிலை அல்லது படம் வீட்டில் வைத்திருந்தால் வறுமை என்பது ஏற்படாது. அன்னபூரணி எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு கோமாதாவும் முக்கியம் தான். காலையில் எழுந்ததும் டீ, காபி போடுவதற்கு பாலை தான் நாம் முதலில் தேடுகிறோம். மனிதனின் முதல் உணவாக இருக்கக்கூடிய இந்த பாலை நீங்கள் காலையில் எழுந்து காபி போடும் முன்பு ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் ஊற்றி பூஜை அறையில் வையுங்கள்.

- Advertisement -

கோமாதா சிலைக்கு முன்பாக வைத்து விட்டு, சகல செல்வங்களும் அருள்க என்று வேண்டிக் கொண்டு பின்னர் காபி, டீ என்று எதனாலும் போட்டுக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் கோமாதா உடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும். அந்த வீட்டில் வறுமை ஏற்படாது என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. ஒரு மனிதன் அறியாமல் செய்த எல்லா பாவங்கள் நீங்க பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பார்கள்.

தெரியாமல் செய்த பாவங்கள் மட்டும் அல்ல, மிகப் பெரிய தோஷங்கள் கூட பசுவிற்கு தானம் செய்வதால் நீங்குவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. பிரம்மஹத்தி தோஷம் விலக, பித்ரு தோஷம் தீர, கர்ம வினை பயன்களால் ஏற்படக்கூடிய துன்பங்களை போக்க, மனிதன் 16 அகத்திக்கட்டு கீரையை பசுவுக்கு தானம் தர வேண்டுமாம்.

- Advertisement -

பசுவை ஒரு முறை வலம் வந்தால், இந்த பூமியை முழுவதுமாக வலம் வந்ததற்கு சமமாக குறிப்பிடப்படுகிறது. பசுவின் ஒவ்வொரு அங்கங்களிலும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் காணப்படுகின்றன. அதில் பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி இருக்கின்றாள். அதனால் தான் எல்லோரும் பசுவின் பின்புறத்தை தொட்டு வணங்குகிறார்கள்.

மும்மூர்த்திகளும் பசுவில் அடக்கம் எனவே பசுவை பக்தியுடன் தொட்டு வணங்கினால் தீராத பாவங்கள் தீரும். குறிப்பாக அதனுடைய கழுத்து பகுதிகளில் சொரிந்து தடவி கொடுத்தால், நம்மை பீடித்து இருக்கும் துன்பங்கள் நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை. பசுவின் காலடிபட்ட மண்ணை திருமண்ணாக பூசிக் கொண்ட மாமன்னர்கள் நம் நாட்டில் உண்டு. மேலும் பசு நடந்து செல்லும் பொழுது எழக்கூடிய புழுதியானது நம்முடைய உடம்பில் பட்டால் எட்டு வகையான புண்ணிய நீராடல் செய்த பலன் கிடைக்குமாம்.

பசு ‘மா…’ என்று கத்தும் பொழுது அது மங்கலமான இசையாக இருக்கிறது. இந்த இசை ஒலிக்கும் இடங்களில் எல்லாம் இறைவன் இருக்கின்றார். மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க கோமாதாவை வீட்டில் வைத்து தினம் தோறும் அதற்கு பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். பசுவை வைத்து செய்யப்படும் தர்ம காரியங்கள், மந்திர ஜெபங்கள் 100 மடங்காக பலன்களை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே நம்மால் பசுவை வளர்க்க முடியாவிட்டாலும், அதற்கு தேவையான தானங்களை செய்தும், கோமாதா படத்தை வைத்து வழிபட்டும் வந்து அதற்குரிய பலன்களை பெறலாம்.

- Advertisement -