பச்சை பயிறு இருந்தா புரோட்டின் சத்துமிக்க இந்த தோசையை காலையில பிரேக் பாஸ்ட்க்கு டக்குனு இப்படி செஞ்சு கொடுங்க. நாள் முழுதும் தெம்பா இருக்க காலையிலேயே இத தான் சாப்பிட்டனும்.

pachai-payaru-dosai_tamil
- Advertisement -

உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் உணவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் முதல் உணவானது மிகவும் சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அன்றைய நாள் முழுவதும் நாம் வேலை செய்ய அது நிச்சயம் உதவியாக இருக்கும். அந்த வகையில் புரோட்டீன் சத்து உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சத்து மிகுந்த தோசையை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

பச்சை பயறு – 1 கப், பச்சரிசி -1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 5, இஞ்சி – சின்ன துண்டு. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த தோசை செய்வதற்கு முதலில் ஒரு பவுலில் பச்சை பயிருடன், பச்சரிசியை சேர்த்து நன்றாக கழுவி சுத்தம் செய்து விட்டு நல்ல தண்ணீர் ஊற்றி எட்டு மணி நேரம் வரை ஊற விட வேண்டும். பயறு எட்டு மணி நேரம் ஊற வேண்டியது அவசியம்.

pachai-payaru-dosai1

எட்டு மணி நேரம் கழித்து மிக்ஸி ஜாரில் பச்சை பயறு, பச்சரிசி இரண்டையும் சேர்த்து அத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், (உங்கள் காரத்தின் அளவுக்கு ஏற்றபடி சேர்த்து கொள்ளுங்கள்) சீரகம், உப்பு என அனைத்தையும் சேர்த்த பிறகு பருப்பு ஊற வைத்த தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த மாவை ஒரு பவுலில் ஊற்றிய பிறகு தோசை மாவு பதத்திற்கு கலந்து விடுங்கள். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவே இதை கரைத்த உடனே நாம் தோசை ஊற்றி விடலாம்.

- Advertisement -

இப்போது அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடான பிறகு மாவை எடுத்து நீங்கள் எப்பொழுதும் ஊற்றுவது போல. தோசை எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் சுட்டு கொள்ளுங்கள். இந்த தோசை நல்ல மொறு மொறுன்னு நன்றாகவே வரும். இந்த தோசைக்கு சைட் டிஷ் கூட தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் ரவை இருந்தா ஸ்கூல் விட்டு வர குழந்தைகளுக்கு டக்குனு மொறுமொறுன்னு இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுத்திடுங்க. நீங்க டீ போடுற டைமுக்குள்ள இந்த ஸ்நாக்ஸ் ரெடியாகிடும்.

ஒரு வேளை இந்த தோசைக்கு உங்களுக்கு சைட் டிஷ் வைத்து சாப்பிட வேண்டும் என்றால் எந்த வகையான சட்னியாக இருந்தாலும் இதற்கு பிரமாதமாக இருக்கும். அதிலும் தேங்காய் சட்னி வைத்து சாப்பிடும் போது இதன் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். சுலபமான சத்து மிகுந்த இந்த தோசையை வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள்.

- Advertisement -