நீங்கள் வைக்கும் சாம்பார் மணமணக்கும் சுவையுடன் இருக்கவும், காய்கறி பொறியலின் சுவையை கூட்டவும் இந்த ஒரு மசாலாவை வீட்டிலேயே அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்

chilli-powder
- Advertisement -

மிளகாய்த்தூளை வீட்டிலேயே அரைத்துக்கொண்டு அதனைச் சமையலுக்குப் பயன்படுத்துவது பலரது வீட்டிலும் பின்பற்றப்படும் ஒரு பழக்கமாகும். ஒருசிலர் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் பொதுவான ஒரு மிளகாய் தூளை தயார் செய்து வைத்துக்கொள்வார்கள். மற்றும் ஒரு சிலர் தனியாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் இப்படி தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் இவற்றைவிட சிறப்பு வாய்ந்த சாம்பார் பொடியை வீட்டில் தயார் செய்து வைத்துக்கொண்டால் சாம்பார் வைக்கும் பொழுதும், காய் பொறியல் செய்யும் போதும் அவற்றை பயன்படுத்திக் கொண்டு அதன் சுவையை அற்புதமாக மாற்ற முடியும். இவ்வாறு சமையலின் சுவையைக் கூட்டும் சாம்பார் பொடியை எப்படி தயார் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Milagai thool

மிளகாய், தனியா மற்றும் ஒரு சில மசாலா பொருட்களை சேர்த்து குழம்பு வைப்பதற்கான மிளகாய்த்தூளை தயார் செய்து கொள்கிறோம். அவ்வாறு இந்த மிளகாய்த்தூள் வீட்டில் இல்லையென்றால் கடையில் விற்கும் மிளகாய்த்தூளை வைத்து சமைக்கும் பொழுது அந்த சமையலில் சுவை சற்று குறைவாகவே இருக்கும். இப்படி வெளியில் வாங்கி சமைக்கும் உணவுப் பொருளை விட நாம் வீட்டிலேயே ஒரு மசாலாவை தயார் செய்து வைத்துக் கொண்டால் அதன் சுவைக்கு வேறு எந்த மசாலாவும் ஈடாகாது.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – 100 கிராம், துவரம் பருப்பு – 250 கிராம், கடலைப் பருப்பு – 250 கிராம், சீரகம் – 250 கிராம், வெந்தயம் – 150 கிராம், கடுகு – 100 கிராம், அரிசி – 150 கிராம், மிளகு – 100 கிராம், கருவேப்பிலை – இரண்டு கைப்பிடி, தனியா – முக்கால் கிலோ, விரல் மஞ்சள் – 100 கிராம், காய்ந்த மிளகாய் – ஒரு கிலோ, உப்பு – 6 ஸ்பூன், விளக்கெண்ணெய் – 200 கிராம்.

pasi-paruppu

செய்முறை:
சாம்பார் பொடி செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் 300 கிராம் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகு கடலை பருப்பு துவரம் பருப்பு இவை இரண்டையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக சீரகத்தையும் கடாயில் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு கடுகு, வெந்தயம், மிளகு போன்ற அனைத்தையும் தனித்தனியாக வறுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு 20 கருவேப்பிலையை கடாயில் சேர்த்து வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் முக்கால் கிலோ தனியாவையும் வறுத்து தட்ற்க்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு இறுதியாக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து, அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து அதனுடன் ஒரு கிலோ காய்ந்த மிளகாயை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

milagaithul1

பின்னர் இவை அனைத்துடன் 100 கிராம் விரல் மஞ்சளை சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் மிஷினில் கொடுத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மிளகாய்தூளை நன்றாக ஆறவைத்து, அதனுடன் 6 ஸ்பூன் தூள் உப்பு மற்றும் 200 கிராம் விளக்கெண்ணையை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் இரண்டு வருடம் ஆனாலும் மிளகாய்த்தூள் அரைத்து வைத்த அதே பதத்தில் அப்படியே இருக்கும்.

- Advertisement -