- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇப்படி ஒரு கூட்டாஞ்சோறு செஞ்சு பாருங்க. இதில் உங்க பாட்டியோட கைமணம் நிச்சயம் வீசும்.

இப்படி ஒரு கூட்டாஞ்சோறு செஞ்சு பாருங்க. இதில் உங்க பாட்டியோட கைமணம் நிச்சயம் வீசும்.

- Advertisement -

கூட்டாஞ்சோறு என்பது திருநெல்வேலி பக்கம் மிகவும் பிரபலமாக செய்யப்படும் ஒரு ரெசிபி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இந்த கூட்டாஞ்சோறு சமைப்பார்கள். முறைப்படி சமைக்க வேண்டும் என்றால் அடுப்பில் பானையை வைத்து தான் இந்த கூட்டாஞ்சோறு சமைக்க வேண்டும். ஆனால் அதற்கான சௌகரியங்கள் எல்லாம் இப்போது நமக்கு இல்லை. இப்போது நம் வீட்டில் இருக்கும் வசதிக்கு ஏற்ப குக்கரில் கூட்டாஞ்சோறு செய்வது எப்படி என்ற ரெசிபியை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் 1 கப் அளவு சாப்பாட்டு அரிசி, 1/2 கப் அளவு துவரம்பருப்பு நமக்கு தேவைப்படும். இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக போட்டு நன்றாக கழுவி விட்டு, அதன் பின்பு தண்ணீரை ஊற்றி 20 நிமிடங்கள் நன்றாக ஊறவைத்துக் கொள்ளுங்கள். அடுத்து சிறிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து புளிக் கரைசலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் – 3 பல், வரமிளகாய் – 4, சீரகம் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல இதையும் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

நமக்கு இந்த கூட்டாஞ்சோறு செய்ய முருங்கைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய், மாங்காய், உருளைக்கிழங்கு, கேரட், இந்த காய்கறிகள் தேவைப்படும். இது தவிர உங்களுக்கு விருப்பமான கருணைக் கிழங்கு, பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு காய்கறிகளை எடுத்து நறுக்கி கழுவி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த கூட்டாஞ்சோறுக்கு கண்டிப்பாக தேவையானது 2 கைப்பிடி அளவு முருங்கைக்கீரை. சுத்தம் செய்த முருங்கை கீரையை கழுவி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது குக்கரில் கூட்டாஞ்சோறு எப்படி தாளிப்பது என்று பார்ப்போம்.

அடுப்பில் ஒரு குக்கரில் வைத்து 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், நீளவாக்கில் வெட்டிய சின்ன வெங்காயம் – 15 பல், பச்சை மிளகாய் – 4, இந்த பொருட்களை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் வதங்கி வந்தவுடன் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை குக்கரில் சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக பழுத்த 2 தக்காளியை பொடியாக வெட்டி சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், சாம்பார் தூள் – 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு காய்கறிகளை ஒரு நிமிடம் மட்டும் எண்ணெயில் வதக்கி, 4 கப் அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். (1 1/2 கப் அளவு அரிசி பருப்புக்கு, 3 கப் அளவு தண்ணீர் தேவைப்படும். இந்த சாதம் கொஞ்சம் தளதளவென கிடைக்க வேண்டும் என்பதால் 4 கப் தண்ணீர் சரியாக இருக்கும்.)

அடுத்து புளி கரைசலை ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை ஊற்றி, தண்ணீர் தளதளவென கொதித்து வரும்போது ஊற வைத்திருக்கும் அரிசி பருப்பை குக்கரில் போட்டு, நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வந்ததும் இறுதியாக முருங்கைக்கீரை இலைகளை தூவி, கலந்து விட்டு குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் விட்டால் போதும் கூட்டாஞ்சோறு தயார்.

விசில் நன்றாக அடங்கியதும் குக்கரைத் திறந்து கலந்து விட்டு, 1 ஸ்பூன் நெய்யை மேலே ஊற்றி பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி, இதோடு எள்ளு துவையல் அல்லது வத்தல் வைத்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்