- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோரிக்கை நிறைவேற அபிஜித் நட்சத்திர மந்திரம்

கோரிக்கை நிறைவேற அபிஜித் நட்சத்திர மந்திரம்

- Advertisement -

ஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் உண்மையாக பார்த்தோம் என்றால் 28 நட்சத்திரங்கள் இருக்கிறதாம். அதில் சூட்சமமான முறையில் மறைந்திருக்கக்கூடிய நட்சத்திரம் தான் அபிஜித் நட்சத்திரம். இந்த நட்சத்திரம் வரக்கூடிய நேரத்தில் நாம் என்ன செய்தாலும் அது நமக்கு நன்மையாகவே வந்து சேரும் என்பதால் பலரும் இந்த நட்சத்திரத்தை தவறாக உபயோகப்படுத்த முடியும் என்பதால் கிருஷ்ண பகவான் தன்னுடைய மயிலிறகில் இந்த நட்சத்திரத்தை மறைத்து வைத்து விட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட அபிஜித் நட்சத்திரம் மாதத்தில் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட 24 நிமிடம் மட்டுமே இருக்கும். அந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்துபவர்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும். அந்த முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான தெய்வம் அதி தேவதையாக திகழ்வார்கள். அந்த வகையில் அபிஜித் நட்சத்திரத்திற்கு கிருஷ்ண பகவானே அதிதேவதையாக திகழ்கிறார். அபிஜித் நட்சத்திரம் என்பது திருவோண நட்சத்திரம் வருவதற்கு முன்பாக இருக்கக்கூடிய 24 நிமிடங்கள் தான் இருக்கும். அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய அபிஜித் நட்சத்திர நாளன்று கிருஷ்ண பகவானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பங்குனி மாதத்தின் 11ம் நாள் மார்ச் மாதத்தின் 25ஆம் தேதி விடியற்காலை 4:15 மணிக்கு தொடங்கி 4:39 மணி வரை இருக்கக்கூடிய 24 நிமிடங்கள் தான் அஜித் நட்சத்திரம் இருக்கக் கூடிய நேரமாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் ஏகாதசி திதியும் திருவோண நட்சத்திரமும் நாள் முழுவதும் திகழ்கிறது. அபிஜித் நட்சத்திரம் எந்த அளவிற்கு கிருஷ்ண பகவானுக்கு உரிய நட்சத்திரமோ அதேபோல் திருவோண நட்சத்திரமும் பெருமாளுக்கு உரிய நட்சத்திரமாக திகழ்கிறது. மேலும் அன்றைய நாளில் இருக்கக்கூடிய திதியான ஏகாதசி திதியும் பெருமாளுக்கு உரிய திதியாக திகழ்கிறது. அதனால் இவை மூன்றும் சேர்ந்து வரக்கூடிய இந்த அற்புதமான நாளை நாம் தவறவிடாமல் பெருமாளை வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய கோரிக்கைகள் நிறைவேறும்.

அபிஜித் நட்சத்திரம் இருக்கக் கூடிய இந்த நேரத்திற்கு முன்பாகவே சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து மனதில் இரண்டு கோரிக்கைகளை நினைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கிருஷ்ண பகவானின் இந்த ஒரு மந்திரத்தை குறைந்தபட்சம் 10 நிமிடமாவது கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் அந்த கோரிக்கை நிறைவேறும். ஒருவேளை பிரம்ம முகூர்த்த நேரமான அந்த அபிஜித் நட்சத்திரம் வரக்கூடிய நேரத்தை தவறவிட்டவர்கள் அன்றையநாள் முழுவதும் தங்களால் இயன்ற நேரத்தில் இந்த மந்திரத்தை கூறலாம்.

- Advertisement -

மேலும் இந்த மந்திரத்தை கூறுவதற்கு பூஜை அறையில் அமர்ந்து தான் கூற வேண்டும் என்று இல்லை. அதே போல் பெண்கள் மாதவிடாய் சமயத்திலும் இந்த மந்திரத்தை கூறலாம். வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டும் இந்த மந்திரத்தை கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் யாரும் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் நாளைய தினம் கிருஷ்ண பகவானின் இந்த ஒரு மந்திரத்தை முழுமனதோடு நிறுத்தி நிதானத்துடன் கூறுவதன் மூலம் கிருஷ்ண பகவானின் அருளால் அவர்கள் வைத்த கோரிக்கை நிறைவேறும்.

மந்திரம்

- Advertisement -

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய நமஹ

இதையும் படிக்கலாமே:வறுமை நீங்க மந்திரம்

கிருஷ்ண பகவானை முழுமனதோடு நினைத்து மனதார இந்த மந்திரத்தை கூறி நம்முடைய கோரிக்கைகளை முன்வைக்க கிருஷ்ண பகவானின் அருளால் அந்த கோரிக்கைகள் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்