சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும் கோஷ்டாஷ்டமி நாள் இன்று.

komatha
- Advertisement -

நாம் எல்லோருக்கும் கோகுலாஷ்டமி தான் தெரியும். அது என்ன கோஷ்டாஷ்டமி. இதை சில பேர் கோபாஷ்டமி என்றும் சொல்லுவாங்க. இது எதற்காக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகல சௌபாக்கியங்களையும், சர்வ மங்களத்தையும் நம்முடைய குடும்பம் பெற வேண்டும் என்றால், செய்த பாவங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால், என்ன வழிபாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றிய விரிவான தகவலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கோஷ்டாஷ்டமி வழிபடும் முறை

கார்த்திகை மாதம் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமி திதி (20.11.2023) அன்றுதான் கோஷ்டாஷ்டமி கொண்டாடப்படுகின்றது. இது பசுக்களுக்கு நன்றி தெரிவிக்க கூடிய திருநாள். பசுக்கள் நமக்கு பால் கொடுக்கிறது. அதிலிருந்து தயிர் நெய் வெண்ணெய் போன்ற பொருட்களை நாம் தயார் செய்து பலன் அடைகின்றோம்.

- Advertisement -

இதற்கு பசுவிற்கு நாம் நன்றியை தெரிவிக்க வேண்டிய கடமை இருக்கிறது அல்லவா. அதற்கான நாளாக தான் இன்றைய நாளை கொண்டாடுகிறார்கள். பசு வைத்திருப்பவர்கள் அந்த கோசாலையை சுத்தம் செய்து பசுக்களுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பூ வைத்து, வணங்கி வழிபாட்டினை மேற்கொள்வார்கள். இப்போது பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் பசுக்கள் கிடையாது.

அதனால் நீங்கள் பசு இருக்கும் தொழுவத்திற்கு சென்று, அங்கு இருக்கும் பசுக்களை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். இதன் மூலம் பசுக்களில் வாசம் செய்யும் முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசிர்வாதமும் அந்த மகாலட்சுமியின் ஆசீர்வாதமும் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

உங்களால் பசுக்களுக்கு என்ன வாங்கி தர முடியுமோ அதை வாங்கிக் கொண்டு போய் சாப்பிட கொடுக்க வேண்டும். இரண்டு வாழைப்பழம் கொடுத்தாலும் அது உங்கள் புண்ணிய கணக்கில் சேர்ந்து விடும். பாவ கணக்கை கழிக்கும். அது மட்டுமல்லாமல் இன்று மாலை உங்களுடைய வீட்டில் பஞ்சகவ்யா விளக்கு ஒன்று ஏற்றுவது ரொம்ப ரொம்ப சிறப்பான பலனை தரும். காரணம் பஞ்சகவ்ய விளக்கு என்பது பசுக்களில் இருந்து எடுக்கப்படும் ஐந்து பொருட்களை சேர்த்து செய்யப்படக்கூடிய விளக்கு.

உங்களுடைய வீட்டில் கோமாதாவின் சிலை அல்லது கோமாவதாவின் திருவுருவப்படம் இருந்தால் இன்று மாலை அந்த கோமாதாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும். கோமாதா சிலையாக இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து ஆரத்தி காண்பித்து குடும்பத்தோடு வழிபாடு செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் நிம்மதியாக வாழ பரிகாரம்

குடும்பத்தோடு பசுவிடம் இன்று ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய குடும்பம் சுபிட்சம் பெறும். இந்த கோஷ்டாஷ்டமி கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த யுகத்தில் இருந்து வழி வழியாக கொண்டாடப்படக்கூடிய ஒரு பண்டிகை நாள். இந்த நாளைப் பற்றிய சிறப்புகளை தெரியாதவர்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா. இதனை தொடர்ந்து, நம்பிக்கை உள்ளவர்கள் இதைப் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -