கொசு தொல்லையா அப்படின்னா என்ன? இப்படி கேட்கும் அளவுக்கு கொசுவே உங்களை நெருங்காமல் இருக்க ஒரு சூப்பரான டிப்ஸ் இதோ உங்களுக்காக.

mosquito killer tips
- Advertisement -

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சமாளித்து விடுவார்கள். ஆனால் இந்த சின்னஞ் சிறிய கொசுவினால் வரும் தொல்லையும் பிரச்சனையும் சமாளிப்பது பெரிய பாடு தான். ஏனெனில் இந்த கொசு வந்து கடிப்பதனால் பல வித வியாதிகள் பரவுவதோடு, வீட்டில் இருப்பவர்களின் நிம்மதியும் சேர்த்து கெடுத்து விடுகிறது. அப்படியான இந்த கொசுக்களை விரட்ட எளிமையானதொரு வழியை தான் இந்த வீட்டுக்கு குறிப்பு பதிவில் இப்போது தெரிந்து நாம் கொள்ள போகிறோம்.

கொசுக்களை சுலபமாக விரட்ட வழி
கொசுக்களை விரட்ட வேண்டும் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது கெமிக்கல் கலந்த லிக்விட், காயில் போன்றவை தான். இது பலருக்கும் ஒத்துக் கொள்வதில்லை குழந்தைகளுக்கு இதனால் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படுகிறது. எனவே இது போல கெமிக்கல் கலந்த பொருட்களை உபயோகிப்பது தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் கொசு தொல்லை இருக்காது.

- Advertisement -

இதற்கு முதலில் வேப்ப எண்ணையை எடுத்துக் கொள்ளுங்கள். வேப்ப எண்ணைக்கு பதிலாக கடுகு எண்ணெயும் பயன்படுத்தலாம் இரண்டும் கசப்புத் தன்மை உடையது எனவே இரண்டுமே ஒரே மாதிரியான செயலை புரியும். வேப்பெண்ணெய் கால் கப் அளவு எடுத்து கொள்ளுங்கள் இத்துடன் 5 கற்பூரம், 5 பல் பூண்டு தோல் உரித்து நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் சின்ன கடாய் ஒன்றை வைத்து அதில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் எண்ணெய் ஊற்றி சூடு படுத்துங்கள். எண்ணெய் மிதமான சூட்டிற்கு வந்தவுடன் கற்பூரத்தை நுணுக்கி பவுடராக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல நசுக்கி வைத்த பூண்டையும் சேர்த்து எண்ணெயை காய்ச்ச வேண்டும். இது மிதமான தீயிலே நன்றாக காய்ந்து கொதிக்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்து அதில் சேர்த்து இருக்கும் பூண்டின் நிறம் சிவந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். எண்ணெய் சூடு ஆறும் வரை அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு இதை எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை எடுத்து தோல் எடுத்து வெங்காயத்தின் நான்கு புறமும் லேசாக நறுக்கி விடுங்கள். ஏனெனில் வெங்காயத்தின் வாடை நன்றாக வரவேண்டும் அதற்காகத்தான் இந்த நான்கு மூலையில் நாம் வெங்காயத்தை கொஞ்சமாக நறுக்கி விடுகிறோம். நறுக்கிய இடத்தில் எல்லாம் நாம் காய்ச்சி வைத்த எண்ணெயை நன்றாக தடவ வேண்டும். வெங்காயம் முழுவதும் எண்ணெய் தடவிய பிறகு ஒரு ஊசி நூலை வெங்காயத்தில் உள்ளே கோர்த்து உங்கள் வீட்டில் கொசு அதிகமாக வரும் இடத்தில் கட்டி தொங்க விடுங்கள்.

பொதுவாக வெங்காயம் பூண்டு இவற்றின் வாடைக்கு கொசு வராது என்று சொல்வார்கள். ஆனால் வேப்பெண்ணை கற்பூரம் எல்லாம் கலந்த இந்த எண்ணையை வெங்காயத்தில் சேர்க்கும் போது இதன் வாடை இருக்கும் இடத்தில் கொசு கிட்ட கூட நெருங்காது. ஒரு முறை கட்டிய இந்த வெங்காயம் நான்கு நாட்கள் வரை அப்படியே இருக்கும். எண்ணெய் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வெங்காயத்தின் மேல் தேய்த்து விடுங்கள். நீங்கள் தயாரித்து வைத்த எண்ணெய் இரண்டு வாரம் வரை கூட வைத்து பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: பல வருஷமா தேய்க்காம கறை படிந்த சிங்கை கூட பத்து நிமிஷத்துல கை வலிக்காமல் சுலபமா கிளீன் பண்ண இது மட்டும் இருந்தா போதும். இனி உங்கள் வீட்டில் உப்பு கறைங்கிற பேச்சுக்கே இடம் இல்லை.

இந்த குறிப்பு மிகவும் எளிமையானது. அதே நேரத்தில் அதிக செலவில்லாதது என்பதோடு, இதனால் எந்த கேடும் இல்லை என்பது தான் முக்கியமான தகவல். இப்படி செய்யும் போது உங்கள் வீட்டில் கொசு தொல்லை மட்டும் இன்றி சின்ன சின்ன பூச்சி வண்டுகள் போன்றவை கூட இந்த வாடைக்கு வராது. என்ன தான் நாம் இது போல கொசுக்களை விரட்ட வழிமுறைகளை கையாண்டாலும் முதலில் நம்மையும் நம்மை சுற்றி இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்திருப்பது முதல் தற்காப்பு ஆகும். இந்தப் பதிவில் உள்ள கொசுவை விரட்டும் வழிமுறை உங்களுக்கு பிடித்திருந்தால் இது போல நீங்களும் உங்கள் வீட்டில் தயார் செய்து வைத்துக் கொண்டு கொசு தொல்லை இன்றி நிம்மதியாக இருங்கள்.

- Advertisement -