பல வருஷமா தேய்க்காம கறை படிந்த சிங்கை கூட பத்து நிமிஷத்துல கை வலிக்காமல் சுலபமா கிளீன் பண்ண இது மட்டும் இருந்தா போதும். இனி உங்கள் வீட்டில் உப்பு கறைங்கிற பேச்சுக்கே இடம் இல்லை.

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை உப்பு தண்ணீர். இந்த உப்பு தண்ணீரால் நாம் அன்றாட வீட்டின் வேலைகள் பாதிப்பதோடு வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் உப்பு தண்ணீரால் அதிகம் பாழடைந்து விடும். அதிலும் பாத்ரூம் டைல்ஸ் இவையெல்லாம் பற்றி கேட்கவே வேண்டாம். எப்படி சுத்தம் செய்தாலும் கூட உப்பு தண்ணீராக இருந்தால் அது உடனே கறை பிடித்து விடும். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் உப்பு கறை படிந்த சிங்கை சுலபமாக எப்படி சுத்தம் செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

உப்பு கறை படிந்த சிங்கை சுலபமாக சுத்தம் செய்யும் லிக்வீட் தயாரிக்கும் முறை:
இந்த கறை படிந்த சிங்கை எல்லாம் சுத்தம் செய்வதற்கு முதலில் பவுலில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் துணி துவைக்கும் பவுடர் அனைத்தையும் சேர்த்த பிறகு ரெண்டு ஸ்பூன் வினிகர் அல்லது அரை எலுமிச்சை பழத்தின் சாறு இவை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக உங்கள் வீட்டில் ஸ்பிரே பாட்டில் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது ஏதாவது ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மூடியில் துளைகள் போட்டுக் கொள்ளுங்கள். அந்த பாட்டிலில் நீங்கள் கலந்து வைத்த லிக்விடை ஊற்றி நன்றாக ஒரு முறை கலந்த பிறகு கறை படிந்த சிங் முழுவதும் ஸ்ப்ரே செய்து லேசாக பிரஷ் வைத்து தேய்த்து அப்படியே ஊற விடுங்கள்.

ஐந்து நிமிடம் கழித்து பிரஷ்ஷில் கொஞ்சமாக கோல்கேட் பேஸ்ட் வெள்ளை நிறத்தில் இருப்பதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதை வைத்து ஏற்கனவே நாம் ஸ்ப்ரே செய்து வைத்திருக்கும் சிங்கில் மறுபடியும் ஒரு முறை லேசாக தேய்த்தாலே போதும் கறைகள் முழுவதும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

- Advertisement -

உங்கள் சிங்கில் அதிக கறையில்லாமல் கொஞ்சமாக இருந்தால் இந்த லிக்விட் கூட தேவை இல்லை. வெறும் பேஸ்ட்டை மட்டுமே வைத்து தேய்த்து விடலாம். ஒரு வேளை நாள்பட்ட கறைகளாக இருந்தால் இந்த லிக்விடை பயன்படுத்திய பிறகு பேஸ்ட் வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். உங்கள் சிங்க் எப்போதும் புதிது போல பள பளவென்று இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பஞ்சு போல சாஃப்ட் இட்லி செய்ய இனி மாவு அரைச்சு கஷ்டப்பட வேணாம். இதோ இப்படி செஞ்சு வச்சுக்கோங்க கஷ்டமே இல்லாம சுலபமா இட்லி சுட்டு எடுத்திடலாம்.

இதையே வைத்து பாத்ரூம் டைல்ஸ் கிச்சன் டைல்ஸ் கிச்சன் மேடை ஸ்டவ் என அனைத்து கறைகளையும் கூட சுலபமாக சுத்தம் செய்து விடலாம். இந்த ஒரு லிக்வீட்டை தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். உங்கள் நேரம் பணம் இரண்டுமே மிச்சம் ஆகி விடும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -