அட! ஆமால்ல இதை இப்படி கூட செய்யலாமேன்னு நீங்க யோசிக்கிற மாதிரி இந்த வெயில் காலத்துக்கு ஏற்ற அட்டகாசமான ஸ்மார்ட் ஐடியா.

Summer Tips
- Advertisement -

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக இந்த வேலைகளை செய்யாமலும் இருக்க முடியாது. ஆனால் செய்யும் வேலையில் இந்த சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் நம்முடைய வேலை நேரத்தை பாதியாக குறைத்துக் கொள்வதுடன் அவசரமாக செய்ய வேண்டிய சூழ்நிலையும் இருக்காது. இப்போது இந்த வீட்டு குறிப்பு பதிவிலும் அது போன்று அருமையான குறிப்புகளை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த குறிப்பில் கோடைகாலத்தில் உடல் உஷ்ணத்தையும் சோர்வையும் தவிர்க்க அடிக்கடி நாம் பழ சாறுகள் ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். அதற்கு அந்த நேரத்தில் செய்யாமல் ஒரு சில வேலைகளை நாம் முன்னமே செய்து வைத்து விட்டால், வெளியில் சென்று வந்தவுடன் குளிர்ச்சியாக அதே நேரத்தில் உடலை சட்டென்று புத்துணர்ச்சியாக மாற்ற கூடிய ஒரு சில பானங்களை உடனே தயார் செய்யலாம். அதற்கு என்னென்ன நாம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் எப்பொழுதும் எலுமிச்சை பழச்சாறு இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள். விலை மலிவாக கிடைக்கும் சமயங்களில் அதிக அளவில் எலுமிச்சை பழங்களை வாங்கி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைத்து பின் எடுத்து சாறு பிழிந்து விழுந்து ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து விட்டால் தேவைப்படும் போதெல்லாம் அதிலிருந்து கொஞ்சமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அதன் பிறகு பிழியும் போது சாறும் அதிகமாக கிடைக்கும்.

அதே போல் வெல்லத்தையும் நன்றாக நுணுக்கி தண்ணீர் ஊற்றி திக்காக காய்ச்சி ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வெயில் காலத்தில் ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் வெல்ல கரைசல் மட்டும் சேர்த்து குடித்தாலே போதும் அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும் உடலுக்கும் மிகவும் நல்லது.

- Advertisement -

வெயில் காலத்தில் தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும் அப்படி குடிக்கும் நேரில் சிறிது வெட்டி வேரை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் நல்லது. தண்ணீர் காய்ச்சி குடிக்க முடியாதவர்கள் இரவு தண்ணீரில் வெட்டி வேரை போட்டு விட்டு மறுநாள் வடிகட்டி அந்த தண்ணீரை குடிக்கும் போது உடலுக்கும் குளிர்ச்சியை கொடுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

வெள்ளை சர்க்கரை உடம்புக்கு அவ்வளவு நல்லது கிடையாது. எனவே கற்கண்டு வாங்கி நன்றாக தூள் செய்து மிக்ஸியில் சேர்த்து பவுடராக அரைத்து டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஜூஸ் போன்றவற்றுக்கு எல்லாம் சர்க்கரைக்கு பதிலாக இந்த கற்கண்டு பவுடரை பயன்படுத்தினால் உடலுக்கும் நல்லது. பக்க விளைவும் கிடையாது.

- Advertisement -

பீட்ரூட்டை வாங்கி தோல் சீவி நன்றாக துருவி நிழலில் காய வைத்து மிக்ஸியில் அரைத்து பவுடராக்கி ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். ஒரு டம்ளர் பாலை நன்றாக காய்ச்சி அதில் கால் டீஸ்பூன் இந்த பீட்ரூட் பவுடரை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி 2 ஸ்பூன் கற்கண்டு பவுடரையும் சேர்த்து ஆறிய பிறகு கொஞ்சம் ஐஸ் கியூபை சேர்த்து கலந்து கொடுத்து பாருங்கள். ரோஸ் மில்கே தோற்று விடும் அந்த அளவுக்கு சுவையாக இருக்கும். இனி குழந்தைகள் ரோஸ் மில்க் கேட்டால் இப்படி செய்து கொடுங்கள்.

இந்த வெயில் காலத்தில் வீட்டில் எப்போதும் பாதாம் பிசின், சப்ஜா விதைகளும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். சப்ஜா விதைகளை ஊற வைத்தால் அரை மணி நேரத்தில் ஊறி விடும் பாதாம் பிசின் அப்படி கிடையாது எட்டு மணி நேரம் ஊற வேண்டும். அதற்கு ஒரு வாரத்திற்கு தேவையான அளவு பாதாம் பிசினை ஊற வைத்து டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த பழச்சாறு தயார் செய்தாலும் அதில் கொஞ்சம் சப்ஜா விதைகளையும், பாதாம் பிசினையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இரண்டுமே உடலுக்கு அவ்வளவு குளிர்ச்சியை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: சமையலறையிலேயே நாளெல்லா வீணாகி விடுகிறதா? கவலை வேண்டாம், உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் சூப்பரான 10 கிச்சன் டிப்ஸ்

இந்த பதிவில் உள்ள சின்ன சின்ன குறிப்புகளை நாம் தெரிந்து கொண்டால் இந்த வெயில் காலத்தில் இதற்கென நாம் செலவு செய்யும் எவ்வளவோ நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாம். அது மட்டும் இன்றி இது போல எப்போதும் நம் வீட்டில் தயார் செய்து வைக்கும் போது தேவையில்லாமல் வெளியில் காசு கொடுத்து கெமிக்கல் கலந்த பானங்களை அருந்தாமல் ஆரோக்கியமான பானங்களையே அருந்தலாம்

- Advertisement -