- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்இப்படி செஞ்சா உங்க வீட்ல மட்டும் இல்லைங்க நீங்க இருக்க தெரு பக்கம் கூட...

இப்படி செஞ்சா உங்க வீட்ல மட்டும் இல்லைங்க நீங்க இருக்க தெரு பக்கம் கூட கொசு வரவே வராது.

- Advertisement -

இப்போதுள்ள சூழ்நிலையில் எந்தெந்த வியாதிகள் எப்படி வருகிறது என்பதை கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு உள்ளது. அதிலும் இந்த கொசு கடித்தால் வரும் வியாதிகள் எத்தனையோ உண்டு. டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா இது நமக்கு தெரிந்தவைகளில் மிக சில நோய்களே. பொதுவாக இந்த சிறு உயிர்களில் மனிதனுக்கு மிகவும் தொல்லை தரக்கூடியது இந்த கொசுக்கள் தான். இதை அழிப்பதென்பது சற்று கடினமான காரியம் தான். முடிந்த அளவிற்கு நம்மையும் நம்மைச் சுற்றியும் சுத்தமாக வைத்திருந்து, ஆங்காங்கே நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதும் தான் நமக்கு பாதுகாப்பு. கொசு நம் வீட்டிற்குள் வராமல் தடுத்துக் கொள்ளலாம் தவிர இதை முற்றிலுமாக அழிப்பது என்பது சந்தேகம் தான்.

இந்த கொசுக்கள் நம் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க கொசுவத்தி சுருள், லிக்விட் இது போன்ற ரசாயனம் கலந்த பாதுகாப்புகள் இருந்தாலும், அதை சுவாசிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் இன்னொரு புறம். இதை எல்லாம் தாண்டி இந்த கொசுவை சமாளிப்பதற்காகவே, நம் வீட்டில் உபயோகப்படுத்தும் சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்ட நாமே ஒரு லிக்விட் தயாரித்து, இந்த கொசுக்களை நம் வீட்டு பக்கமே வர விடாமல் செய்துவிடலாம். அது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒரு முக்கியமான பதிவு தான் இது

- Advertisement -

அதற்கு முதலில் நாம் எடுத்து கொள்ள வேண்டியது பொடி கற்பூரம், லவங்கம், பூண்டு, வெங்காயம், ஷாம்பு, தேங்காய் எண்ணெய், டூத் பேஸ்ட், இவையெல்லாம் கலக்க கொஞ்சமாக தண்ணீர்.

முதலில் வெங்காயத்தையும், பூண்டையும் தோலுரிச்சி நல்லா பொடியா நறுக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து வச்சுடுங்க. அதுல பொடி கற்பூரம் ஒரு பத்து போட்டு, அது கூடவே லவங்கம் ஒரு ஐந்து சேர்த்துகோங்க. இதோட ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் கட் பண்ணி அதுல ஊத்திடுங்க.(எந்த ஷாம்பூவாக இருந்தாலும் பரவாயில்லை).

- Advertisement -

இதை எல்லாம் சேர்த்த பிறகு நல்ல நுரை வரும் அளவுக்கு மிக்ஸ் பண்ணி விட்டுடுங்க. மிக்ஸ் பண்ண பிறகு அதில் கொஞ்சம் தேங்காய் எண்ணெயும் (ரெண்டு ஸ்பூன் இருந்தால் போதும்) சேர்த்து எல்லாவற்றையும் முதலில் பேஸ்ட் போல செய்து வைச்சிடுங்க. பிறகு கடைசியா கொஞ்சமா டூத் பேஸ்ட் சேர்த்து (டூத்பேஸ்ட் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை) கூடவே கொஞ்சமா தண்ணி ஊற்றி நல்லா அடிச்சு வெச்சிடுங்க. இது குறைஞ்சது எட்டு மணி நேரம் வரை அப்படியே இருக்கட்டும்.

இதையும் படிக்கலாமே: 1/2 கிலோ கீமா வாங்கி இப்படி மட்டும் வடை சுட்டுப் பாருங்க! இனி வாழ்க்கையில் இந்த டேஸ்டை மறக்கவே மாட்டீங்க, ‘கறி கீமா வடை’ எளிதாக செய்வது எப்படி?

எட்டு மணி நேரம் கழிச்சு இதை வடி கட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைத்துவிட்டு சாயங்கால நேரம் உங்கள் வீட்டின் அனைத்து மூலையிலும் அடிச்சி விட்டுடுங்க. இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க. அப்புறம் கொசு உங்க வீட்டு பக்கம் இல்ல, நீங்க இருக்க ஏரியா பக்கம் கூட வராது.

சற்று முன்