1/2 கிலோ கீமா வாங்கி இப்படி மட்டும் வடை சுட்டுப் பாருங்க! இனி வாழ்க்கையில் இந்த டேஸ்டை மறக்கவே மாட்டீங்க, ‘கறி கீமா வடை’ எளிதாக செய்வது எப்படி?

mutton-keema-vadai1
- Advertisement -

மட்டன் கொத்து கறியைத் தான் கீமா என்கிறார்கள். இந்த கறி கீமா கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ரொம்பவே சுவை மிகுந்ததாக இருக்கிறது. அசைவ பிரியர்களுக்கு வரமாக இருக்கக் கூடிய இந்த மட்டன் கீமாவில் ‘வடை’ இப்படி எளிதாக ஒரு முறை தயாரித்து பாருங்கள். இந்த டேஸ்டை சாப்பிடுபவர்கள் சாகும் வரை மறக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கக் கூடிய இந்த எளிதான கறி கீமா வடை எப்படி தயாரிப்பது? என்பதை இனி பார்ப்போம்.

மட்டன் கீமா வடை செய்ய தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு – அரை கப், பச்சை மிளகாய் – ஒன்று, சோம்பு – ஒரு ஸ்பூன், மட்டன் கீமா – அரை கிலோ, பெரிய வெங்காயம் – ஒன்று, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, மல்லி தழை – சிறிதளவு, சோள மாவு – 2 ஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

மட்டன் கீமா வடை செய்முறை விளக்கம்:
மட்டன் கீமா வடை செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவிற்கு மட்டனை கீமா போட்டு கடையிலிருந்து வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே நீங்கள் அரை கப் அளவிற்கு கடலைப் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊறப் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் கழித்து பருப்பு நன்கு ஊறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்துள்ள தண்ணீரை வடிகட்டி விட்டு பருப்பை மட்டும் மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் காரத்திற்கு ஒரே ஒரு பச்சை மிளகாய் மற்றும் வாசனைக்கு ஒரு ஸ்பூன் சோம்பு பிரஷ்ஷாக சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதுடன், நீங்கள் மட்டன் கீமாவையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை உதிர்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அளவுக்கு இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும். இஞ்சி பூண்டு துண்டுகளாக நறுக்கியும் சேர்க்கலாம்.

- Advertisement -

பிறகு இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் ஒரு கொத்து ஃபிரெஷ்சாக இருக்கும் கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். பின்னர் அதன் மீது அரை ஸ்பூன் அளவுக்கு சீரகத்தை தூள் செய்து சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் வெறும் மிளகாய்த்தூள், 2 ஸ்பூன் கான்பிளவர் மாவு, கால் ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். கெட்டியாக வடை மாவு பதத்திற்கு இருக்கும், இதில் தண்ணீர் எதுவும் கொஞ்சம் கூட சேர்த்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

இதையும் படிக்கலாமே:
முளை கட்டிய பச்சை பயறு தோசை மாவு 10 நிமிஷத்தில் இப்படி தயாரித்து காலையில் தோசை சுட்டு சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க கஷ்டப்பட வேண்டாமே! ஈஸியான பச்சை பயறு தோசை எப்படி சுடனும்?

வெங்காயத்தில் இருக்கும் நீரே தண்ணீர் விட ஆரம்பிக்கும். எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து விட்ட பின்பு, சிறு சிறு வடைகளாக தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதை அடுப்பில் சூடான எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் சிவக்க மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்தால் அவ்வளவு சுவையான மட்டன் கீமா வடை ரெசிபி தயார்! நீங்களும் இதே மாதிரி வீட்டில் ட்ரை பண்ணி பார்த்து எல்லோருடைய பாராட்டுகளையும் வாங்கி அசத்திடுங்க.

- Advertisement -