கொத்தமல்லி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா?

நமது அன்றாட சமையலில் உணவின் ருசியை கூட்டவும், நமது உடல்நலத்தை மேம்படுத்தவும் பல வகையான பொடிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்க்கிறோம். அந்த வகையில் அன்றாடம் நாம் சமைக்கின்ற உணவில் சேர்ப்பதை தவிர்க்கவே முடியாத ஒரு உணவு பொருளாக கொத்தமல்லி கீரை இருக்கிறது இந்த கொத்தமல்லி சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கொத்தமல்லி நன்மைகள்

வயிறு பிரச்சனைகள்
நாம் சாப்பிடும் உணவை சீரணித்து நமக்கு சக்தியை தரும் வயிறு மற்றும் குடல் உறுப்புக்கள் நன்றாக இயங்க கொத்தமல்லி உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கும் கொத்தமல்லியில் நறுமண எண்ணெய் இருப்பதால், பசியை தூண்டி வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் சுரப்புக்களை அதிகமாக சுரக்க உதவுகிறது. எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமான திறனை மேம்படுத்துகிறது.

சரும நோய்கள்

கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகள், நச்சுக்கள் போன்றவற்றை அழிக்கும் நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மை அதிகமுண்டு. எனவே சில சரும நோய்களை நீக்குவதில் கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது. தோல் தடிப்பு, அரிப்பு மற்றும் இதர சருமம் சம்பந்தமான வியாதிகளுக்கு புதிய கொத்தமல்லி இலைகளை அரைத்துத் தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக கழுவினால் தோல் வியாதிகள் விரைவில் குணமாகும்.

- Advertisement -

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால தொடக்க காலங்களில் வாந்தி, தலைசுற்றல், உடல்சோர்வு போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். இருந்தாலும் இந்த சமயங்களில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் அடிக்கடி ஏற்படும் தலைச்சுற்றலும், வாந்தியும் நீங்கும்.

அம்மை நோய்

கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன என்பதை ஏற்கனவே அறிவோம். உடலுக்கு ஏற்படும் தொற்று நோய்களான அனைத்து வகையான அம்மை நோய்களுக்கும் எதிராக கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது. எனவே அம்மை நோய் பாதித்தவர்கள் கொத்தமல்லி அதிகம் சாப்பிட்டு வர விரைவில் குணம் கிடைக்கும்.

மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்

ஒரு சிலருக்கு காரணமின்றி அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் வடியும். இதற்கு தீர்வாக 20 கிராம் புதிய கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அந்த சாற்றினை இரத்தம் வரும் நாசித்துவாரத்தில் சொட்டு சொட்டாக விட மூக்கில் வடிகின்ற இரத்தம் உடனே நின்றுவிடும். சில சமயங்களில் இக்கலவையை முகர்ந்து பார்த்தாலே இரத்தம் வடிவது நின்றுவிடும்.

வாய்ப்புண்

காரமான உணவுகளை சாப்பிடுவது, வாய் மற்றும் பற்களை சுகாதாரமாக வைத்து கொள்ளாதது போன்ற காரணங்களால் சிலருக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன. கொத்தமல்லி இலையில் சிட்ரோநெல்லோல் எனப்படும் சிறப்பான கிருமிநாசினித் வேதிப்பொருள் உள்ளது. வாயிலுள்ள புண்கள் ஆறவும், சுவாசம் புத்துணர்ச்சி பெறவும் அடிக்கடி கொத்தமால்லி இலைகளை சாப்பிட்டு வருவது நல்லது.

கொழுப்பு

சிலர் அளவிற்கதிகமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.

கல்லீரல்

சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் கொத்தமல்லி சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை கொத்தமல்லி சாறு அருந்தி வந்தாலும் அல்லது தினமும் உணவில் கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரலில் வீக்கம் ஏதும் ஏற்பட்டிருந்தாலும் அது குணமாகிறது.

மாரடைப்பு

இதயம் நன்றாக இயங்குவதற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் கொழுப்பு அதிகம் படியாமல் இருக்க வேண்டும். கொத்தமல்லி ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் கொண்டுள்ளது எனவே கொத்தமல்லி அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து பெருமளவு குறைக்கிறது.

கண் சம்பந்தமான பிரச்சனைகள்

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் நோய், விழி வெண்படல அழற்சி, மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதோடு கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைகின்றன. சிறிது கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து, அதனை மெல்லிய சுத்தமான துணியினால் வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த நீரின் சில சொட்டுக்களை கண்களில் அடிக்கடி விட்டுக்கொண்டு வர கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி, கண்களில் அடிக்கடி நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

இதையும் படிக்கலாமே:
கொத்தவரங்காய் பயன்கள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kothamalli benefits in Tamil. It is also called as Kothamalli uses in Tamil or Kothamalli payangal in Tamil or Kothamalli maruthuva payangal in Tamil.