கொத்தமல்லித்தழைக்கு இப்படி ஒரு பவர் இருக்கா? எவ்வளவு கருப்பான சருமமும், உடனடியாக வெள்ளையா மாற இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

face
- Advertisement -

நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கும். முகத்தில் நெற்றி மட்டும் கருப்பாக இருக்கும். தாடை மட்டும் கருப்பாக இருக்கும். சில பேருக்கு கழுத்து மட்டும் கருப்பாக இருக்கும். முகம் முழுவதும் ஒரே வண்ணமாக இருக்காது. சில பேருக்கு கை முட்டி, கால் முட்டி, அக்குள் பகுதிகளில் அதிகமாக கருப்பு நிறம் படிந்திருக்கும். இப்படி எந்த இடத்தில் எல்லாம் உங்களுக்கு கருப்பு நிறம் அதிகமாக இருக்கின்றதோ அந்த இடத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பேக் போடுங்க.

இதேபோல் முகம் முழுவதும் வெள்ளையாக மாற வேண்டுமென்றால், இந்த ஃபேஸ் பேக்கை முகம் முழுவதிலும் அப்ளை செய்து ட்ரை பண்ணி பார்க்கலாம். நம்ம வீட்ல இருக்கக்கூடிய சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து இந்த பேக்கை எப்படி தயார் செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

கொஞ்சமாக ஒரு அரை கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைகளை, வேரை மட்டும் நீக்கி விட்டு, தண்டுகளோடு பொடியாக நறுக்கி, மிக்சி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். கால் கப் அளவு கொத்தமல்லி தழை சாறு திப்பிகளை வடிகட்டி நமக்கு தேவை. 1/4 கப் அளவு கொத்தமல்லி தழை சாறை ஒரு சிறிய பௌலில் ஊற்றி கொள்ளுங்கள். இதோடு அரிசி மாவு 1/2 ஸ்பூன், லெமன் ஜூஸ் – 1/2 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். நமக்கு தேவையான ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது.

இதை முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். 10 நிமிடம் இதை அப்படியே முகத்தில் நன்றாக உளர விட்டுவிடுங்கள். அதன் பின்பு கையை ஈரத்தில் நனைத்துக் கொண்டு, முகத்தை நன்றாக நனைய வைத்து விட்டு, முகத்தில் இருக்கும் பேஸ்புக்கை 3 நிமிடங்கள் அப்படியே வட்ட வடிவில் மசாஜ் செய்து கழுவி பாருங்கள். எந்த இடத்தில் எல்லாம் அடர்த்தியாக கருப்பு நிறம் இருந்ததோ அந்த இடத்தில் லேசாக கருப்பு நிறம் குறைந்திருப்பதை கண்கூடாக காணமுடியும். ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால் நல்ல ரிசல்ட் நிச்சயமாக தெரியும்.

- Advertisement -

இதே போல உங்களுடைய உடம்பில் எந்த இடத்தில் அதிக கருப்பு நிறம் இருக்கிறதோ, கழுத்துப்பகுதி, கால் முட்டி, கை முட்டி, எந்த இடத்தில் கருப்பு நிறம் இருந்தாலும் சரி, அந்த இடத்தில் இந்த பேக்கை கொஞ்சம் திக்காக போட்டு, 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு நன்றாக மசாஜ் செய்து அதன் பின்பு கழுவிவிட வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் இப்படி செய்து வர ஒரே மாதத்தில் கருப்பு நிறம் எவ்வளவு குறைந்தது என்ற வித்தியாசத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும். நிச்சயமா நம்பமுடியாத ரிசல்ட் கிடைக்கும்.

ஒருவேளை எலுமிச்சம்பழம் சாறு உங்கள் தோலுக்கு செட் ஆகாது என்றால் எலுமிச்சை பழ சாரை தவிர்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு பிரச்சனையும் கிடையாது. 13 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த டிப்ஸை ட்ரை பண்ணலாம். தினம்தோறும் இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணக்கூடாது. காரணம் இதில் அரிசி மாவு சேர்த்திருப்பதால் முகத்தில் ஸ்கரப் செய்யும் போது சுருக்கம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. அழகாயிருக்கிறதும் கூட ஒரு வகையான தன்னம்பிக்கையை கொடுக்கக் கூடிய விஷயம் தான்.

- Advertisement -