இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஆரோக்கியமான கொத்தமல்லி துவையல் ஐந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள், பிறகு அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

kothamalli-thogayal1
- Advertisement -

பித்தம் நீக்கக்கூடிய கொத்தமல்லியை அடிக்கடி இப்படி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகும். கொத்தமல்லி சுவை மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மைகளை செய்யக் கூடியது ஆகும். தொடர்ந்து கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் இதய நோய்களை தடுக்கலாம். வாய் துர்நாற்றம், பல் ஈறு வீக்கம் போன்றவற்றை கூட எளிதாக நீக்க கொஞ்சம் கொத்தமல்லி இலையை மென்று சுவைத்தால் போதும். இத்தகைய மகிமைகள் வாய்ந்த கொத்தமல்லியை துவையல் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? 2 வகைகளில் இங்கே கொத்தமல்லி துவையல் எப்படி செய்வது? என்பது கொடுக்கப்பட்டுள்ளது! நீங்களும் அவற்றை அறிந்து கொள்ள இப்பதிவை பின்தொடருங்கள்..

‘கொத்தமல்லி துவையல்’ செய்ய தேவையான பொருட்கள் 1:
கொத்த மல்லி – ஒரு கைப்பிடி அளவிற்கு, தேங்காய் – 100 கிராம், இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு பல் – 5, புளி – நெல்லிக்காய் அளவிற்கு, பச்சை மிளகாய் – 10, உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தண்ணீர் – 100ml, தாளிக்க: சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன், வர மிளகாய் – 1.

- Advertisement -

‘கொத்தமல்லி துவையல்’ செய்முறை விளக்கம் 1:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லியை தண்டு பகுதியை நீக்கி இலை இருக்கும் தண்டுடன் கூடிய பகுதியை மட்டும் தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் அவற்றை போட்டு அதனுடன் துண்டு துண்டாக வெட்டிய தேங்காய் 100 கிராம் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு துண்டு இஞ்சி, 5 பல் பூண்டு, சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளி, 10 பச்சை மிளகாய்கள் ஆகியவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கொள்ளுங்கள்.

kothamalli 2-compressed

பின்னர் துவையலுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் ஜாரை மூடி நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு தாளிக்க ஒரு கரண்டியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து மற்றும் வர மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்து துவையலுடன் சேர்க்கவும். இந்த சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை! இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று அனைத்து வகை உணவுகளுக்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். இது ஒரு முறையாகும்! இன்னொரு முறையிலும் செய்யலாம்.

- Advertisement -

‘கொத்தமல்லி துவையல்’ செய்ய தேவையான பொருட்கள் 2:
கொத்த மல்லி – 1 கட்டு, புளி – 1 சிறு நெல்லிக்காய் அளவிற்கு, கடலைப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 2, துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

kothamalli-thogayal

‘கொத்தமல்லி துவையல்’ செய்முறை விளக்கம் 2:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பருப்பு வகைகள் வறுபட்டதும், வர மிளகாய் மற்றும் கொஞ்சம் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்குங்கள்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள தேங்காயை சேர்த்து, நெல்லிக்காய் அளவிற்கு புளியையும் போட்டு கலந்து கொள்ளுங்கள். தேங்காய் லேசாக வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தமல்லியை போட்டு 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். இவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவிற்கு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தாளித்தம் செய்தால் அட்டகாசமான சுவையுடன் சூப்பராக கொத்தமல்லி துவையல் ரெடி ஆகிவிடும்.

- Advertisement -