காது குத்துவதற்கு பின் உள்ள அறிவியல் உண்மை

kathu-kuthu5

இந்து மதத்தை மொறுத்தவரை குழந்தை பிறந்த பதினோராவது மாதத்திலோ அல்லது அதற்கு பிறகோ காது குத்துவது வழக்கம். ஆண் குழந்தை பெண் குழந்தை என இருவருக்கு காது குத்தப்படுகிறது. இந்த சடங்கிற்கு பின் ஒரு அற்புதமான அறிவியல் ஒளிந்துள்ளது. வாருங்கள் அது குறித்து விரிவாக பார்ப்போம்.

kathu kuthu

நம் உடம்பானது வெறும் எலும்பும் தோலும் மட்டுமே நிறைந்தது கிடையாது. நமது உடலை ஒரு சக்தி மண்டலம் இயக்குகிறது. அந்த சக்தி மண்டலத்தை சீராக வைத்துக்கொள்ள நாம் சில விடையங்களை செய்தாக வேண்டி உள்ளது. அதில் ஒன்று தான் காது குத்துதல் என்னும் சடங்கு.

குழந்தைகளுக்கு சிறு வயதிலே காது குத்துவதன் மூலம் அவர்களது மூளை வளர்ச்சி மற்றும் நியாபக சக்தி அதிகரிக்கிறது. இடது மற்றும் வலது முலையை ஒன்றிணைக்கும் மையப்பகுதியாக காது விளங்குவதால் காது குத்தவதன் மூலம் நியாபக சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞானபூர்வமாக கூறப்படுகிறது.

kathu kuthu

காது குத்தி தோடு அணிவதன் மூலம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும் என்று கூறப்படுகிறது. அதோடு காது குத்துவதன் மூலம் செரிமான மண்டலம் சரிவர இயங்குகிறது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

காது குத்தும் சமயத்தில் கவனிக்க வேண்டியவை:

பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஆகையால் காது குத்துவதற்கு முன்பு காது சுத்தமாக இருக்கிறதா, காது குத்தும் ஊசி சுத்தமாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்பது அவசியம். இல்லையேல் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

kadhu kuthu

காதில் அணிவிப்பதற்காக வாங்கும் தோடு தொங்குவது போல் இல்லாமல் எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது. குழந்தைகள் புதிதாக தோடை அணிவதால் அவர்களுக்கு அதை இழுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வாய்ப்புள்ளது. ஆகையால் அவர்கள் கையில் சிக்காத வகையில் தோடு இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே:
பெண்கள் தலையில் பூ சுடுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல் உண்மை

காது குத்திய பிறகு குறைந்தது ஒரு வார காலத்திற்கு அந்த இடத்தில் தூய தேங்காய் எண்ணெயை விட்டு வரலாம். தினமும் ஓர் இரு முறை கம்மலை திருக வேண்டும். இப்படி தொடர்ந்து ஆறுமாதம் வரை திருகினால்தான் கம்மல் காதோடு ஒட்டாமல் காதில் உள்ள ஓட்டை தெளிவாக இருக்கும்.