5 நிமிடத்தில் மீந்து போன சப்பாத்தியை எப்படி சுவையான கொத்து சப்பாத்தியாக மாற்றுவது? இது தெரிஞ்சா சப்பாத்தி மீந்து போனா இனி தூக்கி போடவே மாட்டீங்க!

kothu-chappathi_tamil
- Advertisement -

அரிசி உணவை காட்டிலும், கோதுமை உணவை எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் எடை குறையும் என்று நம்பப்படுகிறது. இதனால் அரிசி உணவை அதிகம் தவிர்த்து, சப்பாத்திக்கு மாறி வருபவர்கள் அதை மீந்து போனால் தூக்கிப் போடத் தான் செய்வார்கள். இப்படி வீணாக போகும் சப்பாத்தியை, சூப்பரான சுவை நிறைந்த கொத்து சப்பாத்தியாக ஐந்தே நிமிடத்தில் எப்படி மாற்றுவது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கொத்து பரோட்டா கேள்விப்பட்டிருப்போம். அடிக்கடி அதை சாப்பிடவும் செஞ்சிருப்போம் ஆனால் கொத்து சப்பாத்தி சாப்பிடும் பொழுது அதன் ருசியே அலாதியானதாக இருக்கும். அதிக பொருட்கள் இல்லாமல் ரொம்ப குறைந்த செலவிலேயே, குறைந்து பொருட்களைக் கொண்டு, குறைந்த நேரத்தில் எப்படி சுவையான கொத்து சப்பாத்தி செய்ய போகிறோம்?

- Advertisement -

தேவையான பொருட்கள்

சப்பாத்தி – ஐந்து, முட்டை – இரண்டு, பெரிய வெங்காயம் – இரண்டு, சிறிய குடைமிளகாய் – ஒன்று, கருவேப்பிலை – ஒரு இணுக்கு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள் – அரை ஸ்பூன்.

செய்முறை

முதலில் கொத்து சப்பாத்தி செய்ய தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், குடைமிளகாய் போன்றவற்றை தோல் நீக்கி சுத்தம் செய்து மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மீந்து போன சப்பாத்தியை எடுத்து சிறு சிறு துண்டுகளாக கிள்ளி போட்டுக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் கொஞ்சம் போல எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பொடி பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். இரண்டு நிமிடம் இதை வதங்கியதும், வெட்டி வைத்துள்ள குடைமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். இவை நன்கு சுருள வதங்கி வரும் பொழுது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் தேவையான அளவிற்கு சேர்த்து நன்கு பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். இவை வதங்கியதும் பொடி பொடியாக வெட்டி வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுங்கள்.

ஒரு ரெண்டு நிமிடம் இது போல பிரட்டி எடுத்ததும் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்குங்கள். முட்டை நன்கு வெந்து வந்ததும், மிளகு தூள் சேர்த்து ஒரு முறை நன்கு வதக்குங்கள். அவ்வளவுதாங்க, இதை சுட சுட இப்பொழுது தட்டில் போட்டு சாப்பிட்டு பாருங்கள், அற்புதமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
முருங்கைக்காய் வாங்கின ஒரு முறை இப்படி செஞ்சு வச்சுக்கோங்க. இனி மூணு மாசத்துக்கு சைட் டிஷ் செய்யணும்ன்ற பிரச்சனையே கிடையாது. இட்லி, பூரி, சப்பாத்தி, சாதம் என எல்லாத்துக்குமே இது ஒன்னே போதும்.

சூடான சுவையான கொத்து சப்பாத்தி இப்பொழுது தயார்! இதே மாதிரி நீங்களும் உங்க வீட்டில் செஞ்சி கொடுத்து பாருங்க கண்டிப்பாக உங்களை பாராட்டுவாங்க. ருசியாக இருக்கக்கூடிய இந்த கொத்து சப்பாத்தி ரெசிபி செய்வதற்கு ரொம்ப சுலபம் தான், எனவே செஞ்சு வச்ச சப்பாத்தியை வீணாக்காமல் இப்படி செஞ்சு சாப்பிட்டு அசத்துங்க.

- Advertisement -