கொட்டாங்குச்சி தானே என்று சாதாரணமாக நினைத்து, இனி இதை தூக்கி போட்டு விடாதீர்கள். இதை வைத்து என்னென்ன செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால் ஆச்சயர்யப்படுவீர்கள்.

- Advertisement -

நம் சமையலறையில் வேண்டாம் என நினைத்து தூக்கிப் போடும் பல பொருட்களின் பயனை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கும். இந்த பொருட்களை வைத்து இப்படி எல்லாம் கூட பயன்படுத்தலாமா என்று நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நிறைய குறிப்புகள் உள்ளது. அந்த வகையில் நாம் வேண்டாம் என தூக்கிப் போடும் கொட்டாங்குச்சி வைத்து வீட்டு சமையலறையில் வேறு என்னென்ன பயன்கள் இருக்கிறது என்பதை தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கொட்டாங்குச்சி வைத்து ஒரு கெட்டி தயிர் செய்யலாம் தெரியுமா? கொட்டாங்குச்சியில் கெட்டி தயிரா எவ்வளவு தண்ணீரான பாலாக இருந்தாலும் கொட்டாங்குச்சியில் ஊற்றி உறை ஊற்றும் போது தயிரில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் கொட்டாங்குச்சி ஈர்த்து கெட்டியான தயிர் உங்களுக்கு கிடைக்கும். அது மட்டும் இன்றி சாதாரணமாக நீங்கள் தயிர் உறை ஊற்றினால் புளிக்க 8 மணி நேரம் ஆகும். இந்த கொட்டாங்குச்சியில் வைத்து செய்யும் போது மூன்றே மணி நேரத்தில் தயிர் கிடைத்து விடும்.

- Advertisement -

அதே போல் இன்று கொட்டாங்குச்சியை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து வீட்டில் உப்பு ஜாடையில் உப்பு கொட்டும் முன் அடியில் கொஞ்சம் கொட்டாங்குச்சி துண்டு போட்டு விட்டு உப்பை கொட்டி இடையில் ஒன்று இருந்து கொட்டாங்குச்சி துண்டுகளை போட்டு வைத்தால் உப்பு தண்ணீர் விடவே விடாது எப்பொழுதுமே காய்ந்த நிலையிலே இருக்கும்.

இதே போல் இந்த கொட்டாங்குச்சி துண்டுகளை அரிசி, பருப்பு கொட்டி வைக்கும் டப்பாக்களிலும் போட்டு வைக்கலாம். பூச்சி வண்டு கட்டி கட்டியாக மாறி விடுவது போன்ற எதுவும் வராது, முடிந்தால் அதில் அளக்க பயன்படுத்தும் டம்ளர், கப்பிற்கு பதிலாக கொட்டாங்குச்சியை பயன்படுத்தினால் இன்னும் நல்லது.

- Advertisement -

அதே போன்று இட்லி ஊற்ற இட்லி பானை கூட தேவையில்லை, ஒரு குக்கரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தண்ணீர் குடித்தது அதில் இரண்டு டம்ளரை வைத்து விடுங்கள் அதன் மேல் கொட்டாங்குச்சியை சுத்தம் செய்து அதில் மாவு ஊற்றி வைத்து குக்கரை மூடி விட்டால் போதும் சூப்பர்னா கொட்டாங்குச்சி இட்லி கிடைத்து விடும்.

எண்ணெய் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றும் போது அதன் வாய் சின்னதாக இருந்தால் எண்ணெய் ஊற்ற முடியாது. எல்லோர் வீட்டிலும் அதை ஊற்றுவதற்கான புனல் இருக்குமா என்று தெரியாது, ஆனால் கொட்டாங்குச்சி எல்லோர் வீட்டிலும் இருக்கும். அதை பாட்டில் மேல் வைத்து ஊற்றினால் எண்ணெய் வீணாகாமல் பாட்டிலில் ஊற்ற முடியும்.

- Advertisement -

இந்த வகையில் இதன் நாரை கூட தூக்கி போடாமல் பயன்படுத்தலாம். நாரை வைத்து எண்ணெய் தொட்டு கல்லில் தேய்த்து தோசை ஊற்றினால் தோசை நன்றாக உற்ற வரும். பூஜை பாத்திரங்கள் தேய்க்கும் போது கூட மற்ற நார்களுக்கு பதிலாக இந்த தேங்காய் நாரை பயன்படுத்தினால், இடுக்குகளில் உள்ள அழுக்குகள் எல்லாம் கூட ஈசியாக வந்து விடும். இந்த கொட்டாங்குச்சியில் கொத்தமல்லி, புதினா, வெந்திய கீரை போன்ற சிறு செடிகளை வைத்து கூடவளர்க்கலாம். தொட்டியில் வைப்பதை விட நன்றாகவே வளரும்.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் நீங்கள் வேண்டாம் என தூக்கி போடும் இந்த ஒரு பொருள் போதும் உங்கள் பழைய தோசை கல்லை புதிதாக மாற்றவும், புதிய தோசை கல்லை பழக்கவும் இதை விட ஒரு எளிமையான வழி இருக்க வாய்ப்பே இல்லை. அப்புறம் என்ன நல்ல மொறு மொறுப்பான தோசையை ஊற்ற வேண்டியது தானே.

இத்தனை பயன்கள் இருக்கும் இந்த கொட்டகுச்சியை நீங்களும் உங்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி உங்கள் வேலைகளை எளிதாக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -