சமையலறையில் நீங்கள் வேண்டாம் என தூக்கி போடும் இந்த ஒரு பொருள் போதும் உங்கள் பழைய தோசை கல்லை புதிதாக மாற்றவும், புதிய தோசை கல்லை பழக்கவும் இதை விட ஒரு எளிமையான வழி இருக்க வாய்ப்பே இல்லை. அப்புறம் என்ன நல்ல மொறு மொறுப்பான தோசையை ஊற்ற வேண்டியது தானே.

- Advertisement -

நம் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் இரும்பு தோசை கல்லை இனி வேண்டாம் என தூக்கி போடவே தேவையில்லை. நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாது அளவிற்கு இந்த குறிப்பு தோசை கல்லை பழக்க உங்களுக்கு உதவியாக இருக்கும். அதே சமயத்தில் இந்த முறை ஒன்றும் புதிதாக வந்தது கிடையாது நம் பாரம்பரியமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய, நாம் மறந்து விட்ட குறிப்பு தான் இது.

தோசைக்கல்லை பழக்குவதற்கு எத்தனை வழிமுறைகள் இருந்தாலும் இந்த முறை மிகவும் வித்தியாசமாகவும், அதே நேரத்தில் மிகவும் எளிமையான முறையிலும் இருக்கும். பெரும்பாலும் இப்போதெல்லாம் அனைவரும் நான் ஸ்டிக் வாங்குவதற்கு காரணமே இந்த இரும்பு தோசை கல்லை பயன்படுத்தும் போது இருக்கும் சிக்கல்கள் தான். ஒன்று கல்லை பழக்க வேண்டும் மற்றொன்று அந்த கல்லை சரியாக பராமரிக்க வேண்டும் இதை சரியாக செய்ய வில்லை என்றால் தோசை ஊற்றவே வராது. இந்த இரண்டையுமே இப்பொழுது உள்ள கால்கட்டத்தில் சரியாக பார்த்து செய்ய முடியாத காரணத்தினால் தான் தோசை கல்லின் ஊற்றும் தோசை உடலுக்கு நல்லது என்று தெரிந்தாலும் கூட பலரும் நான் ஸ்டிக்கை விரும்புகிறார்கள். இனி நாமும் கொஞ்சம் நம் பாரம்பரிய முறையை பின்பற்றலாமா?

- Advertisement -

கொட்டாங்குச்சி நாரை நாம் இதுவரை பாத்திரம் தேய்க்க தானே பயன்படுத்தி வந்துள்ளோம் ஆனால் அந்த நாரை வைத்து ஒரு பழைய தோசை கல்லை கூட பழகி நன்றாக தோசை ஊற்ற வைக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? இனி தோசை வரவே வராது என்று முடிவு செய்த ஒரு பழைய தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளுங்கள். தோசை கல் நன்றாக காய்ந்த பிறகு அந்த கல்லில் கொஞ்சம் தண்ணீர் உப்பு சேர்த்து தெளித்த பிறகு கல்லை துணி வைத்து நன்றாக துடைத்து விடுங்கள். துடைக்கும் பொது கவனமாக துடைத்து கொள்ளுங்கள் கல் சூடாக இருக்கும்.

இப்போது ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெய் எடுத்து கொள்ளுங்கள். இதில் தேங்காய் நார் கொண்டு எண்ணெய் தொட்டு தோசை கல்லில் நன்றாக தேய்த்து விடுங்கள். இந்த தேங்காய் நாரை வைத்து தேய்க்கும் போது தோசை கல்லில் உள்ள பழைய எண்ணை கரைகள், பிசுக்கள் எல்லாம் வருவதோடு மட்டுமின்றி கல்லும் நன்றாக தோசை உற்ற வரும். ஒரு முறை எண்ணெய் வைத்து தேய்த்த பிறகு துணி வைத்து துடைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது மறுபடியும் அதே முறையில் எண்ணையை தொட்டு தேய்த்த பிறகு தோசை ஊற்றி பாருங்கள் உங்கள் தோசை நான் ஸ்டிக்கில் ஊற்றும் போது வருவதை விட மிகவும் எளிதாகவும் மொறுமொறுவென்று ஊற்ற வரும். இந்த முறையில் பழைய தோசை கல்லை மட்டுமல்ல நீங்கள் புதிதாகி வாங்கிய தோசை கல்லை கூட இந்த முறையில் பழக்கி பயன்படுத்தலாம்.

இந்த எளிய முறையை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் தோசை கல்லை பழக்குவதற்கும் பழைய தோசை கல்லை புதுசாக மாற்றுவதற்கு இது நல்ல டிப்ஸாக இருக்கும்.

- Advertisement -