காரடையான் நோன்பு கடைபிடிக்க முடியாத பெண்களுக்கு வழிபாடு

amman2
- Advertisement -

எல்லா சுமங்கலி பெண்களும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய விரதம் தான் இந்த காரடையான் நோன்பு. சிலருக்கு இந்த வழிபாட்டை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். நீங்கள் திருமணமான சுமங்கலி பெண்களாக இருந்து, உங்களுடைய வீட்டில் இந்த வழிபாட்ட மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்லை கவலைப்படாதீங்க. பின் சொல்லக் கூடிய வழிபாட்டு முறையை இன்று மாலை செய்யுங்கள்.

நிச்சயமாக காரடையான் நோன்பு விரதம் இருந்து அம்பாளை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் உங்களுடைய கணவரின் ஆயிலும் நீடிக்கும். உங்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியமும் கிடைக்கும். இன்றைய தினம் காரடையான் நோன்பை எடுத்து வீட்டில் வழிபாடு செய்திருந்தாலும் சரி, நீங்களும் பின் சொல்ல கூடிய இந்த வழிபாட்டினை செய்யலாம் தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

கோவிலில் கரடையான் நோன்பு வழிபாடு

முதலில் வெள்ளை நூல் எடுத்துக்கோங்க. ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக மஞ்சள் தூள் போட்டு, தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து, இந்த வெள்ளை நூலை அந்த மஞ்சளில் போட்டு, மஞ்சள் சரடு தயார் செய்து கொள்ளுங்கள். 11, 21 என்ற கணக்கில் அந்த சரடை தனித்தனியாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் பூ, இப்படி ஒரு தாம்பூலம் தயார் செய்து, அதன் மேலே இந்த மஞ்சள் சரடை வைத்துக் கொள்ளவும்.

ஒரு தாம்பூல தட்டில் இதை எல்லாம் அழகாக அடுக்கி வைத்து விடுங்கள். பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும். துர்க்கை அம்பாள் கோவிலுக்கு போகலாம், அல்லது ஏதாவது அம்மன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு செல்லலாம், சிவன் கோவிலில் அம்பாள் சன்னிதி இருக்கும், அந்த இடத்திலும் இந்த வழிபாட்டை செய்யலாம். பெருமாள் கோவிலில் தாயார் சன்னிதி இருக்கும் அந்த இடத்திலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

தயார் செய்த இந்த தாம்பூல தட்டை அம்பாளின் பாதங்களில் வைத்துவிட்டு, அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். பிறகு கோவிலுக்கு சென்றால் தேங்காய் உடைத்து பூ பழம் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்வோம் அல்லவா அந்த வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். அம்பாளை வழிபாடு செய்து முடித்தவுடன், அம்பாளின் பாதங்களில் வைத்திருக்கும் இந்த தாம்பூலத்துடன் இருக்கும் மஞ்சள் சரடை எடுத்து அந்த கோவிலுக்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு உங்கள் கையால் தானம் கொடுத்து விடுங்கள். அவ்வளவு தான்.

காரடையான் நோன்பில் நீங்கள் கொடுத்த இந்த மஞ்சள் சரடை கோவிலுக்கு வரும் சுமங்கலி பெண்கள் தங்களுடைய கழுத்தில் கட்டிக்கொண்டு, உங்களை ஆசீர்வாதம் செய்தால் அது ரொம்ப ரொம்ப நல்லது. இந்த ஆசீர்வாதம் உங்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும். வீட்டிலிருந்து காரடையான் நோன்பு மேற்கொண்டதை விட பல மடங்கு பலனை கொடுக்கக் கூடிய வழிபாடு இது.

- Advertisement -

இன்று மாலை தவறாமல் இந்த வழிபாட்டை செய்து பலன் பெறுங்கள். இந்த தாம்பூலத்திலிருந்து ஒரு தாம்பலத்தை நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சரடை உங்களுடைய கழுத்திலும் நீங்கள் கட்டிக் கொள்ளலாம். இந்த தாம்பூலத்தை திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கும் கொடுக்கலாம் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: பணவரவு அதிகரிக்க குரு பஞ்சமி வழிபாடு

திருமண வயதில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க, நல்ல கணவன் அமைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த கயிறை அவர்களுடைய கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் வழிபாட்டு முறை உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -