கோவிலுக்கு சென்று வரும் பொழுது இதெல்லாம் தொலைந்து போனால் என்ன அர்த்தம் தெரியுமா?

- Advertisement -

சில சமயங்களில் கோவிலுக்கு சென்று வரும் பொழுது அபசகுனமாக ஏதாவது ஒரு பொருளை தொலைத்து விட்டு வருவது உண்டு. கோவிலுக்கு வெளியில் விடும் காலணி முதல் நாம் கொண்டு செல்லும் ஏதாவது ஒரு விலை உயர்ந்த அல்லது விலை குறைவுள்ள பொருட்கள் வரை நாம் பல சமயங்களில் தொலைத்து விட்டு வருவது உண்டு. கோவிலுக்கு தானே செல்கிறோம்? ஏன் இப்படி நடக்கிறது? என்று பலரும் யோசிப்பது உண்டு. அதற்கான விடை காண தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

purse

நீங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது சில சமயங்களில் உங்களிடம் இருக்கும் மணிபர்ஸ் தொலைந்து விடுவது உண்டு. கையில் கொண்டு சென்ற பணத்தைத் தொலைத்து விட்டு, ஏண்டா கோவிலுக்கு போனோம் என்று ஆகிவிடும்! இறைவனை தரிசனம் செய்ய தானே போகிறோம் ஏன் இப்படி அபசகுனமாக நடக்கிறது? என்று சிந்திப்பவர்கள் இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும். கோவிலுக்கு செல்லும் பொழுதும், சென்று வரும் பொழுதும் எந்த ஒரு விஷயமும் இயல்பாக நடப்பது இல்லை.

- Advertisement -

ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உண்டு. அந்த வகையில் நீங்கள் கோவிலுக்கு சென்று மணி பர்சை தொலைத்து விட்டு வந்தால் அதற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அந்த பணத்தில் இருந்து நீங்கள் வாங்க வேண்டிய ஏதாவது ஒரு பொருள் மூலம் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட இருக்கலாம். அந்தப் பணம் உங்களிடம் இருந்தால் தானே நஷ்டம் ஏற்படும். அதனால் இறைவன் ஒரு சிறு திருவிளையாடல் புரிந்ததாக நினைத்துக் கொள்ள வேண்டும். பணம் தொலைந்தால் அந்த பொருளை நீங்கள் வாங்க முடியாமல் போய் விடும். இதனால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கும்.

slipper

கோவிலுக்கு செல்கிறீர்கள் அங்கு வெளியில் விடும் செருப்பை தொலைத்துவிட்டு வருகிறீர்கள். கோவிலுக்கு செல்லும் பொழுது செருப்பு தொலைந்தால் தரித்திரம் நீங்கும் என்று கூறுவார்கள். காலனியை மாட்டும் பாதத்தில் சனி ஆட்சி பெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே செருப்பு தொலைந்தால் வர இருக்கும் பிரச்சனைகளும், தரித்திரங்களும் தொலையும் என்பது நம்பிக்கை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விட்டது என்று கூறுவது போல, பாதத்திற்கு வந்தது காலணியோடு சென்றுவிட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சிலர் தங்கள் செருப்பு தொலைந்து விட்டதற்காக, வேறு ஒருவருடைய செருப்பை மாட்டிக் கொண்டு வருவது உண்டு. இது மிகப்பெரிய பாவத்தை சேர்க்கும், நீங்கள் புதிதாக ஒரு செருப்பு வாங்கி மாட்டிக் கொள்ளலாம். ஒரு சிலர் ஆன்மீக யாத்திரைக்கு செல்லும் பொழுது பெண்கள் மாங்கல்யத்தை தொலைத்து விடுவது உண்டு. வேண்டுதல் இல்லாமல் இப்படி திருமாங்கல்யம் தொலைவது என்பது அபசகுனமாக கருத வேண்டாம். உங்கள் கணவருக்கு வரவிருக்கும் ஆபத்து அதற்கு சான்றாக இருக்கும் மாங்கல்யம் எடுத்துக் கொண்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

Tiruchendur temple

கோவிலுக்கு சென்று வரும் பொழுது இது போல பொருட்கள் தொலைவதில், ஒவ்வொரு பொருட்களுக்கும் அர்த்தம் உண்டு. பொன், பொருள், பணம் போன்ற அத்தனையும் நமக்கு ஒரு செயலை செய்ய வைக்கிறது. அந்த செயல் நடக்காமல் இருக்க, இறைவன் புரியும் திருவிளையாடலாக தான் இதனை நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அப சகுனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது .எனவே இனி கோவிலுக்கு சென்று வரும் பொழுது ஏதாவது தொலைந்தால் கவலை பட வேண்டாம்.

- Advertisement -