கோவிலுக்கு செல்லும்போது பெரும்பாலானோர் செய்யும் இந்த தவறுகளை நீங்களும் செய்கிறீர்களா? முறையாக கோவிலில் செய்யவேண்டியது என்னென்ன?

kovil
- Advertisement -

சந்தோஷம் நிறைந்த வாழ்வை பெறுவதற்காகவே தினந்தோறும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு வருகின்றோம். கோவிலுக்கு செல்லும் பொழுது சில குறிப்பிட்ட வழிமுறைகளை தொன்று தொட்டு இன்று வரை பின்பற்றி வருகின்றோம். ஆனால் நம்மில் சிலர் இறைவனை வழிபடும் ஆர்வத்தில் சில சாஸ்திரங்களை மீறி விடுகின்றோம். தெய்வ வழிபாட்டு முறைகளில் செய்ய வேண்டியவற்றை சரியாகச் செய்தால்தான் அதற்கான பலன் கிடைக்கும். ஆகையால் கோவிலுக்குள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.

temple

கோவிலுக்குள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
கோவிலுக்கு செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்லாமல் குறைந்தபட்சம் பூக்களாவது வாங்கி செல்ல வேண்டும். இறைவனை வணங்கும் பொழுது ஆண்கள் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்க வேண்டும். நமஸ்காரம் செய்யும்பொழுது ஆஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

- Advertisement -

பெண்கள் இறைவனை வணங்கும் பொழுது கைகளை நெஞ்சுக்கு நேராக வைத்து வணங்க வேண்டும். நமஸ்காரம் செய்யும்பொழுது முழங்கால் மண்டியிட்டு குனிந்து வணங்க வேண்டும். பசுமடம் இருக்கும் கோவில்களுக்குச் செல்லும்போது நிச்சயம் அகத்திக்கீரை கொண்டு செல்ல வேண்டும்.

pasu

தெய்வத்தைத் தரிசனம் செய்துவிட்டு உடனே திரும்பி விடக்கூடாது. சிறிது பின் பக்கமாக நடந்து சென்று பிறகு தான் திரும்ப வேண்டும். இறைவனை வணங்கிவிட்டு திரும்புவதற்கு முன்னர் கோவிலுக்குள் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் கிளம்ப வேண்டும். கோவிலுக்குள் நுழையும் பொழுதும் திரும்பும் பொழுதும் கோவில் கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

- Advertisement -

கோவிலினுள் செய்யக்கூடாத செயல்கள்:
பிறப்பு மற்றும் இறப்பு போன்ற தீட்டின் பொழுது கோவிலுக்கு செல்லக்கூடாது. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல் போன்ற செயல்களை செய்யக்கூடாது, நடந்து கொண்டே திருநீர் வைக்க கூடாது.

கொடி மரம், நந்தி கோபுரம் இவற்றிலிருந்து வரும் நிழலை மிதிக்கக்கூடாது. இறைவன் முன் விளக்கு எரியாத பொழுது வணங்கக் கூடாது. கருவறைக்குள் நமஸ்காரம் செய்யக் கூடாது. அதேபோல் தெய்வத்தை தவிர வேறு எவரையும் கோவிலினுள் வணங்கக் கூடாது.

- Advertisement -

kodimaram

கோவிலில் இருக்கும் நவகிரகங்களை தொட்டு வணங்குதல் கூடாது. நவக்கிரகங்களுக்கு படைக்கும் பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது. நந்தி தேவருக்கும், சிவலிங்கத்திற்கும் இடையில் செல்லக் கூடாது. கோவிலைச் சுற்றி வேகமாக வலம் வரக்கூடாது. நிதானமாக தான் வரவேண்டும். கோவிலினுள் எதிர்மறை எண்ணங்கள், தகாத வார்த்தைகள் போன்றவற்றை பேசக்கூடாது. அஷ்டமி, நவமி, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சதுர்த்தி போன்ற தினங்களில் வில்வ இலையை பறிக்கக் கூடாது.

vilvam1

கோவிலுக்கு சென்று வரும் பொழுது குறைந்த பட்சம் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும். கோவிலில் இருந்து நேராக வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். வீட்டிற்கு வந்த உடனே கால் கழுவுவது, முகம் கழுவுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது.

இனி கோவிலுக்கு செல்லும்போது, இவைகளில் ஏதேனும் நீங்கள் கடைபிடிக்காமல் இருத்தால் அதை இனி கடைபிடித்து பயன்பெறுங்கள்.

- Advertisement -