கோவிலில் விளக்கு ஏற்றும் பொழுது இந்த ஒரு தவறை தவறியும் செய்யக்கூடாது! இதை செய்தால் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறாமல் போய்விடுமாம்.

agal-deepam
- Advertisement -

பொதுவாக கோவிலில் ஏற்றப்படும் விளக்குகளில் 1008 சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளன. பரிகாரத்திற்கு ஏற்றப்படும் விளக்குகளுக்கு சில வழிமுறைகளும், விதிமுறைகளும் உண்டு. கோவிலில் மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கும் பொழுது கண்களை மூடாமல் இறைவனை தரிசிக்க வேண்டும். தீப ஜோதியில் இறைவன் தெரிவது நியதி எனவே அந்த சமயத்தில் கண்களை மூடிக் கொள்ளாமல் இறைவனை முழுமையாக தரிசனம் செய்து உங்கள் வேண்டுதலை மனதில் வேண்டிக் கொள்ளுங்கள். அதே போல கோவிலில் நீங்கள் விளக்கு ஏற்ற நினைத்தால் இந்த தவறை செய்யக் கூடாது! அது என்ன தவறு? என்பதை கீழ் வரும் பத்திகளில் பார்ப்போம்.

agal-vilakku-deepam

கோவிலில் விளக்கு ஏற்றும் பொழுது கண்ட இடங்களில் வைத்து ஏற்றக்கூடாது. அதற்கு என கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விளக்கினை ஏற்ற வேண்டும். ஒருவர் ஏற்றிய விளக்கில் இன்னொருவர் தீபத்தை எரிய விடலாமா? என்று கேட்டால், தாராளமாக எரிய விடலாம். உங்கள் கைகளால் விளக்கு ஏற்றப்பட வேண்டும் என்பது தான் நியதி. அதை எப்படி ஏற்றினாலும் பரவாயில்லை.

- Advertisement -

அதே போல விளக்கு ஏற்றும் பொழுது விளக்கை கைகளில் வைத்துக் கொண்டு மூலவருக்கு தீப ஜோதியை நாம் காண்பிக்கக் கூடாது. கர்ப்ப கிரகத்தில் இருக்கும் அர்ச்சகர் காண்பிக்கும் விளக்கின் ஜோதியை மட்டுமே இறைவனுக்கு காண்பிக்கப்பட வேண்டும் நாம் பரிகாரத்திற்கு ஏற்றப்படும் விளக்கை கையில் வைத்து கோவிலில் இறைவனுக்கு காண்பிக்கக் கூடாது. இவ்வாறு கைகளில் ஏந்தி தீபத்தை காண்பித்தால் உங்கள் வேண்டுதல் பலிக்காமல் போகும் என்றும் சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

agal-vilakku

இறைவனுக்கு ஏற்றப்படும் விளக்கை கிழக்கு திசையில் அல்லது வடக்கு திசையில் வைத்து ஏற்ற வேண்டும். எந்த திசையிலும் ஏற்றலாம் என்று ஏற்றக்கூடாது. அதே போல விளக்கு ஏற்றி வைத்த பின்பு அதனை வரிசையாக சுற்றி வைத்து அலங்கரிக்க கூடாது. ஒரே திசையில் நீங்கள் எத்தனை ஏற்றினாலும் அதனை வைக்க வேண்டும். ஒரு விளக்கிற்கும் இன்னொரு விளக்கிற்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டும். விளக்கு ஏற்ற எண்ணெய், திரி போன்றவற்றை கடன் வாங்க கூடாது.

- Advertisement -

சிலர் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கோவிலுக்கு சென்று விடுவார்கள். ஆனால் விளக்கு ஏற்ற எண்ணெய் அல்லது திரியை மறந்து போய் விடுவார்கள். அங்குள்ள கடையில் நீங்கள் காசு கொடுத்து இவற்றை வாங்கலாமே ஒழிய எவரிடமும் கடனாக பெறக்கூடாது. தீபத்தை எறிய விடுவதற்கு தீப்பெட்டி இல்லை என்றால் நீங்கள் அதனை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். தீப்பெட்டி, தீக்குச்சி போன்றவற்றை கடனாக பெறலாம்.

deepam

விளக்கு ஏற்றும் பொழுது எந்த விதமான தேவையற்ற விஷயங்களைப் பற்றிய பேச்சுகளும் இடம் பெறக்கூடாது. கை தானே விளக்கு ஏற்றுகிறது என்று வாய் பேசிக் கொண்டிருந்தால் அங்கு தோஷம் உண்டாகிறது. இதனால் நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறாமல் போகும் எனவே யாரிடமாவது உரையாடிக் கொண்டே விளக்கு ஏற்றுவது அல்லது தொலைபேசியில் உரையாடுவது போன்றவற்றை தவிர்த்து முழு மனதாக பரிகாரத்திற்கு ஏற்றப்படும் தீபத்தை இறைவனுடைய நாமத்தை உச்சரித்தபடி முழு பக்தி சிரத்தையுடன் ஏற்ற வேண்டும். இப்படி நீங்கள் கோவிலில் விளக்கு ஏற்றி வைத்தால் முழுமையாக உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே இடையுறாமல் பலிக்கும்.

- Advertisement -