தினமும் கிருஷ்ணர் நேரில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில் எங்கு உள்ளது தெரியுமா?

nidhivan krishna temple
- விளம்பரம்1-

அமானுஷ்யங்களும் அதிசயங்களும் கலந்த சில நிகழ்வுகள் எப்போது சில கோவில்களில் நிகழ்வதுண்டு. அந்த வகையில் தினமும் இரவில், கிருஷ்ணர் ராதையோடு வந்து உணவை உண்ணும் ஒரு அதிசய கோவிலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

krishna

உத்தரபிரதேச மாநிலம், மத்தூர் மாவட்டத்தில் உள்ளது விரிந்தவன் என்னும் ஊர். இங்குள்ள நிதிவனம் என்னும் காட்டு பகுதியில் உள்ளது ராங் மகால் என்னும் அதிசய கோவில். இந்த கோவிலிலும் இது இருக்கும் காட்டுப்பகுதியிலும் பல அற்புதங்களும் அமானுஷ்யங்களும் தினமும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

- Advertisement -

நிதிவனம் ஒரு வறண்ட காடு என்பதால் அங்கு நீரை பார்ப்பதே அரிது. அனால் இங்குள்ள மரங்கள் எப்போதும் பச்சை பசேலென காட்டிச்சி அளித்து வியப்பில் ஆழ்த்துகிறது. அதோடு இங்குள்ள மரங்கள் எதுவும் நேராக நிற்பது கிடையாது. மாறாக கிருஷ்ணருக்கு மரியாதை செலுத்துவது போல் நன்றாக வளைந்து நிற்கின்றன.

nidhivan

இந்த காட்டு பகுதியில் உள்ள ராங் மகால் கோவிலில் தினமும் மாலை நேர பூஜை முடிந்த பிறகு, புடவை, படையல் போன்றவை வைக்க பட்டு கோவில் சார்த்தப்படுகிறது. பிறகு அடுத்தநாள் கோவிலை திறந்து பார்க்கும்போது புடவை கலைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் படையலும் உண்ணப்பட்டிருக்கிறது.

krishna

கோவில் சார்த்தப்பட்டபிறகு கோவிலுக்குள் யாரும் செல்வதில்லை. அப்படி இறுக்கியில் இங்கு இது போன்ற ஒரு நிகழ்வு தினமும் நடப்பது விசித்திரமாக உள்ளது. தினமும் இரவில் இங்கு கிருஷ்ணரும் ராதையும் வந்து செல்கின்றனர். அவர்களே ஆடையை உடுத்துகின்றனர். படையலையும் உண்ணுகின்றனர் என்று நம்பப்படுகிறது.

radha krishna

மேலும் இரவு நேரங்களில் இந்த காட்டுப்பகுதிக்குள் யாரேனும் நுழைந்து கிருஷ்ணரின் லீலைகளை காண முயன்றால் அவர்கள் குருடாகிறார்களாம் அல்லது மூளை கலங்கி பைத்தியமாகி விடுகிறார்களாம். இன்று வரை இந்த கோவிலில் நிகழும் இத்தகைய செயல்கள் விசித்திரமாகவே உள்ளது.

Advertisement