2020 கிருஷ்ண ஜெயந்தி எப்போது? நாளை நம்முடைய வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்யலாமா? கூடாதா?

Krishna-mantra-in-tamil
- Advertisement -

எம்பெருமான் நாராயணர், கிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்த தினத்தை தான், கிருஷ்ண ஜெயந்தி என்று நாம் கொண்டாடி வருகின்றோம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே! ஆனால், எப்போதுமே ஆவணி மாதம் வரக்கூடிய கிருஷ்ண ஜெயந்தி, இந்த வருடம் ஆடி மாதத்திலேயே வந்துள்ளது. ஆகவே, கிருஷ்ண ஜெயந்தியை எந்த தினத்தில் கொண்டாடுவது என்ற குழப்பம் நம்மில் பலபேர் மனதில் வந்துவிட்டது. கிருஷ்ண ஜெயந்தியை நம்முடைய வீட்டில் எப்படிக் கொண்டாடுவது? எந்த தினத்தில் கொண்டாடுவது? என்பதற்கான விரிவான விளக்கத்தை இந்த பதிவின் மூலம் தெளிவு படுத்திக்கொள்ளலாம்.

baby-krishna

நாளை 11.8.2020 அன்று, அஷ்டமி திதியில், கோகில அஷ்டமியை, வடமாநிலத்தவர்கள் கொண்டாடுவார்கள். அதாவது , ஜென்மாஷ்டமியாக இந்த தினம் கொண்டாடப்படுகின்றது. ஆனால், இதில், பரமாத்மா அவதரித்த ரோகிணி நட்சத்திரம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 11.8.2020 ஆம் தேதி கிருஷ்ணரை வழிபாடு செய்ய வேண்டுமென்றால், காலை 8.00 மணியிலிருந்து 9.30 மணிக்குள் உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் கிருஷ்ண ஜெயந்தியை மாலை நேரத்தில் கொண்டாடுவதே, மிகவும் சிறப்பானது. மாலை 6 மணியிலிருந்து, இரவு 9 மணிக்குள் எப்போது வேண்டும் என்றாலும் உங்களது பூஜையை செய்யலாம்.

- Advertisement -

10.09.2020 அன்று, அதாவது ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருகின்றது. இதை ஸ்ரீஜெயந்தி என்று சொல்லுவார்கள். இந்த திருநாள் தென்னிந்தியாவில் கிருஷ்ணர் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகின்றது. ஆனால் 10.09.2020 ஆம் தேதி அன்று அஷ்டமித் திதி, முழுமையாக இருந்தாலும், ரோகினி நட்சத்திரம் காலை 11.25 மணி வரை தான் உள்ளது. ஸ்ரீஜெயந்தி கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள், காலை 11.15 முன்பாகவே உங்களுடைய வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி முடித்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, அனைவரது மனதிலும் ஒரு குழப்பம் எழுந்திருக்கும்? நம்முடைய வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியை எந்த தினத்தில் கொண்டாடுவது? அது உங்களுடைய இஷ்டம் தான்! இந்த இரண்டு தினத்தில் என்றைக்கு வேண்டும் என்றாலும், நம்முடைய வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடலாம். இந்த இரண்டு நாளிலுமே, கிருஷ்ண பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், தாராளமாக வழிபடலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. சரி, கிருஷ்ண ஜெயந்தியை நம்முடைய வீட்டில், சுலபமான முறையில் எப்படி வழிபடுவது என்பதைப் பற்றி சுருக்கமாகப் பார்த்துவிடலாமா?

- Advertisement -

குறிப்பாக, குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பவர்கள், தம்பதி சரீரமாக விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. பண்டிகை தினம் என்றால், முந்தைய நாளே, நம் வீட்டை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி அன்று, காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி வைத்து, உங்களது விரதத்தை தொடங்கலாம். விரதம் இருப்பது என்பது, உங்கள் உடல் நிலத்தை பொறுத்து. உங்களது விரதத்தை, உங்கள் இஷ்டப்படி அமைத்துக் கொள்வது சிறந்தது.

Murugan and Krishnar

குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பவர்கள், உங்களுடைய வீட்டில் சிறிய தொட்டிலில், கிருஷ்ணர் அமர்ந்திருப்பது போல உருவம் கொண்ட பொம்மையை வாங்கி வைத்து, கிருஷ்ணரின் பாதங்களை போட்டு, கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான பால், வெண்ணை, தயிர், அவல் கேசரி, முறுக்கு, சீடை நெய்யினால் செய்யப்பட்ட பலகாரங்களை படைத்து, கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து, விசேஷமாக இந்த பூஜையை செய்தால், அடுத்த வருடமே உங்கள் வீட்டில் குட்டி கண்ணனோ, குட்டி ராதையோ தவழ்ந்து வருவார்கள் என்பது ஐதீகம்.

- Advertisement -

இந்த வருடம் லாக் டவுனில் இருப்பதால், எல்லோராலும் இந்த கிருஷ்ண ஜெயந்தியை விமர்சையாக கொண்டாட முடியுமா என்பது கொஞ்சம் சந்தேகமான விஷயம்தான்! இருப்பினும், நம் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியை விமர்சையாக கொண்டாட முடியவில்லை என்றாலும், கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான வெண்ணை, அவல் கேசரியை மட்டுமாவது, நைவேத்தியமாகப் படைத்து, உண்மையான பக்தியோடு நம்முடைய வீட்டில் வழிபாட்டை செய்து முடிக்கலாம்.

krishna jeyanthi kolam

இந்த வருடம் விரதம் இருந்து, அடுத்த வருடம் உங்கள் வீட்டில் செல்ல கண்ணனோ, செல்ல ராதையோ, வந்து விட்டால் அவர்களுடைய, திருப்பாதங்களை வைத்து, கிருஷ்ணனை உங்கள் வீட்டுக்குள்ளேயே அழைத்து, கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது மிகவும் விசேஷமானது.

உங்களால் முடிந்தால், கிருஷ்ண ஜெயந்திக்கு, கிருஷ்ணருக்கு செய்த பலகாரங்களை, உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு பிரசாதமாக விநியோகம் செய்வது என்பது மிகவும் சிறப்பான ஒன்று. குறிப்பாக, ஆதரவு இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, அந்த பிரசாதத்தை கொடுப்பது என்பது, நேரடியாக அந்த கிருஷ்ணருக்கே நெய்வேதியம் படைத்த பலனை நமக்குத் தரும். இவை எல்லாவற்றையும் விட, நாம் எந்த ஒரு பண்டிகையை, நம் வீட்டில் கொண்டாடினாலும், ‘நான்’ என்ற அகந்தையையும், தன்னலம், கர்வம் போன்ற தேவையற்ற குணங்களையும், இறைவனின் பாதங்களில் சமர்ப்பணம் செய்து, சுயநலமற்ற மனதோடு, நம்முடைய பூஜையை நிறைவு செய்வதே சிறப்பான பூஜை! என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கெட்ட எண்ணத்தோடு உங்களை யார் பார்த்தாலும், அந்த திருஷ்டி, எதிர்மறை ஆற்றல், சாபம், பெருமூச்சு, எதுவுமே உங்களை தாக்காது. இதை மட்டும் நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -