கிருஷ்ணர் ஸ்தோத்திரம்

Krishnar-1-1

நம் வீட்டில் இருக்கும் செல்லக் குழந்தைகளை மாயக்கண்ணன், மாயக்கிருஷ்ணன் என்று கொஞ்சுவது வழக்கம். மனித ரூபத்தில் இந்த உலகில் பிறந்து, குழந்தைப் பருவத்திலும், அவர் எடுத்த அவதாரங்களிலும் பல லீலைகளை செய்தவர் கிருஷ்ணர். மோகினியாய் அவதரித்து அசுரர்களை ஏமாற்றியதும் இவரே. மோகத்தை அளிப்பவரும் இவரே. மாயையை விலக்குபவரும் இவரே. இவரின் அடையாளம் தான் என்ன, இவரின் உருவம் தான் என்ன, இவர் எங்கெல்லாம் இருக்கின்றார் என்று கேட்டால் அதற்கான விடைதான் தெரியாது. இப்படிப் பல ரூபங்களை எடுத்து பல சம்பவங்களை நிகழ்த்திய சம்மோகன கிருஷ்ண ரூபத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் துயரம் நீங்கும்.

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத் தெம்மானைக் கூறுதலே.

எம்பெருமான் நாம் காணும் ஆண்களை போன்றவன் அல்ல. நாம் காணும் பெண்களை போன்றவனும் அல்லன். இரண்டும் சேர்ந்த திருநங்கையா? என்று கேட்டால் அதுவும் அல்ல. அவனை கண்களால் காண முடியாது. அவன் இருப்பவனும் அல்ல. இல்லாதவனும் அல்ல. நமக்கு தேவைப்படும் போது தேவையான உருவத்தில் தோன்றி மறைவான். எம்பெருமானை உணர்வது என்பது சுலபமல்ல என்கிறது ஆழ்வார் கூறும் இந்த பாசுரம்.

Krishnar

எம்பெருமானின் மகிமையை உணர்ந்து இந்தப் பாசுரத்தை மனமார தினமும் 11 முறை படித்து வரவேண்டும். இதனால் நமக்கு மன நிம்மதியும், வாழ்வில் மகிழ்ச்சியும், சுகமான வாழ்க்கையும் கிடைப்பதற்கான ஸ்தோத்திரம் தான் இது.

இதையும் படிக்கலாமே
காளி அம்மன் ஸ்லோகம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Krishna stotram in Tamil. Krishna slokam in Tamil. Krishna mantra in Tamil. Krishna manthiram in Tamil.