வாழ்வில் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியை நல்கும் ஹரே கிருஷ்ணா துதி

Krishnar-1-1

ஹரே கிருஷ்ணா துதி

ஹரே கிருஷ்ணா என்பது வைணவர்களால் உச்சரிக்கப்பட்டு புனிதமாக கருதப்படும் ஒரு மந்திரமாகும். இந்த மந்திரம் 16 வார்த்தைகளைக் கொண்டது இதனை மகா மந்திரம் எனவும் கூறுவார்கள்.

Krishna mantra in tamil

மந்திரம்

“ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே”

ஹரா என்றால் பகவானின் சக்தியை குறிக்கின்றது. கிருஷ்ணா, ராம என்ற வார்த்தைகள் கடவுளையே குறிக்கின்றது. கிருஷ்ணா, ராம என்பதன் பொருள் மிக உன்னதமான, ஆனந்தமான என்பதை குறிக்கும். ஹரா என்பது காலப்போக்கில் ஹரே என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தை நாம் ஜெபிப்பது மூலம் நம் வேண்டுதல்கள் அந்த பகவானை அடைய நமக்கு உதவுகின்றது.

கிருஷ்ணர் துதி

க்ருஷ்ணாய பூர்ணபுருஷாய பராத்பராய
யக்ஞேச்வராய பரகாரணகாரணாய
ராதாவராய பரிபூர்ணதமாய ஸாக்ஷாத்
கோலோகதாமதிஷணாய நம: பரஸ்மை

பூரணப் பொருள், மேன்மைக்கு மேலானது, யாகங்களின் தலைவன், யாவற்றிக்கும் காரணப்பொருள், ராதையின் நாயகன், புலனடக்கம் நிறைந்தவன் மற்றும் கோகுலத்தில் உறைகின்ற பரம்பொருளுமாகிய கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.

யோகேச்வரா: கில வதந்தி மஹ: பரம் த்வம் தத்ரைவ ஸாத்வதமநா: க்ருதவிக்ரஹம் ச.

அஸ்மாபிரத்ய விதிதம் யததோத்வயம் தே தஸ்மை நமோஸஸ்து மஹஸாம் பதயே பரஸ்மை

நீ பெரும் ஜோதி, நிலைபெற்ற மனதினன் என்று வர்ணிக்கின்றனர் யோகியர்! நீ மாற்றுருக்கொள்ளாத பரமனென்று நாங்கள் இப்போது அறிந்து கொண்டோம். பேரொளியின் தலைவனே! உனக்கு நமஸ்காரம்.

krishnar

வ்யங்க்யேந வா ந ந ஹி லக்ஷணாய கதாபி ஸ்போடேந யச்ச கவயோ ந விசந்தி முக்யா:

நிர்தேச்யபாவரஹிதம் ப்ரக்ருதே பரம் ச த்வாம் ப்ரஹ்ம நிர்குணம் அமலம் சரணம் வ்ரஜாம:

மூலப் பொருளே! புற சாதனங்களைக் கொண்டு மாபெரும் அறிஞர்களாலும்கூட அணுக முடியாத, குறிப்பால் உணர்த்த இயலாத, குணங்களற்ற, களங்கமற்ற பரப்பிரம்மமாகிய உன்னைச் சரணடைகிறோம்.

த்வாம் ப்ரஹ்ம கேசித் வதந்தி பரே ச காலம் கேசித் ப்ரசாந்தமபரே புவி கூர்மரூபம்

பூர்வே ச யோகமபரே கில கர்த்ரு பாவம் அந்யோக்திபிர்ந விதிதம் சரணம் கதா ஸ்ம

பிரம்மம், காலம், அமைதி ரூபமானவன், கூர்ம வடிவில் உலகைத் தாங்குபவன், நிலையான யோகி, செயல்வடிவான கர்த்தா, பிற தத்துவ வழிகளால் அறியப்படாதவன் என்றெல்லாம் பலரால் வர்ணிக்கப்படும் உன்னைச் சரணடைகிறோம்.

Lord krishnar

ச்ரேயஸ்கரீம் பகவதஸ்தவ பாதஸேவாம் ஹித்வாஸத தீர்த யஜநாதி தபச்சரந்தி

ஜ்ஞாநேந யே ச விதிதா பஹுவிக்நஸங்கை: ஸந்தாடிதா கிமு பவந்தி ந தே க்ருதார்தா:

மிகவும் மேலானதான உனது பாதம் பணிவதை விட்டுவிட்டுத் தீர்த்த யாத்திரை, யாகம், தவம் என்று பலவித அலைக்கழிப்புகளால் துயருற்ற மக்கள் தமது முயற்சிகளால் பலன் பெறமாட்டார்களா?

விஜ்ஞாப்யமத்ய கிமு தேவ அசேஷஸாக்ஷீ ய: ஸர்வபூத ஹ்ருதேஷு விராஜமாந:

தேவைர்நமத்பிர் அமலாய முக்ததே ஹைஸ்தஸ்மை நமோ பகவதே புருஷோத்தமாய

இறைவா! தேவர்களாலும் யோகியராலும் உன்னிடம் தெரிவிக்கப்பட வேண்டியதும் உண்டோ? அனைத்துயிர்களின் இதயங்களிலும் நீக்கமற நிறைந்த, அப்பழுக்கற்ற, நற்குண நாயகனே! நமஸ்காரம்.

யோ ராதிகா ஹ்ருதயஸுந்தரசந்த்ரஹார: ஸ்ரீகோபிகாநயநஜீவநமூலஹார:

கோலோகதாமதிஷணத்வஜாதிதேவ: ஸ த்வம் விபத்ஸு விபுதாந் பரிபாஹி பாஹி

ஸ்ரீராதையின் இதயம் எனும் அழகிய நிலவை மாலையாகக் கொண்டவனும், கோபிகைகளின் கண்களை உயரிப்பிக்கும் மூலசக்தியை மாலையாகக் கொண்டவனும், கோகுலத்தின் உயிர்க்கொடியின் முதற்கடவுளும் ஆகிய நீ, விபத்துக்களின்போது சான்றோரைக் காத்தருள்க!

வ்ருந்தாவநேச கிரிராஜபதே வ்ரஜேச கோபால வேஷக்ருத நித்ய விஹாரலீல

ராதாபதே ச்ருதிதாராதிபதே தாரம் த்வம் கோவர்த்தநோத்தரணோத்தரதர்மதாராம்

பிருந்தாவனத் தலைவனே! கோவர்த்தனகிரியின் நாயகனே! வ்ரஜபூமியின் இறைவனே! இடைச் சிறுவனாக வேடம் பூண்டு பல லீலைகள் புரிந்தவனே! ராதையின் காவலனே! வேதங்களின் ரட்சகனே! நீர் புவியையும் அறத்தையும் கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடித்ததைப் போல் காத்தருளும்!

கிருஷ்ணரின் இந்த மந்திரங்கள் உங்கள் வாழ்க்கையில் எல்லா கஷ்டங்களையும் நீக்கி நல்ல அருளும், வளமும் சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே:
அதிகாலையில் இந்த மந்திரத்தை சொன்னால் அன்றைய நாள் அமோகமாக இருக்கும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.