தமிழ் வருடப்பிறப்பு அன்று செய்ய வேண்டிய சஷ்டி வழிபாடு

vel1
- Advertisement -

தமிழ் வருடங்கள் மொத்தம் 60. இந்த 60 வருடத்திற்கும் பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சோபக்கிருது வருடம் முடிந்து, இப்போது குரோதி வருடத்தில் காலை எடுத்து வைக்க போகின்றோம். இந்த குரோதி வருடம் 38வது வருடமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. குரோதி என்ற வார்த்தையை கேட்ட உடனேயே எல்லோருக்கும் ஒரு பயம் வந்துவிட்டது.

இந்த குரோதி வருடம் எப்படி இருக்க போகுதோ என்று. குரோதி என்றால் கோபம், பகை, பிரச்சனை, போர், போன்ற அர்த்தத்தை குறிக்கின்றது. ஒவ்வொரு வருடத்தின் தமிழ் பெயரை வைத்து அந்த வருடம் எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் சில குறிப்புகள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த வருடம் உலக மக்களுக்கு கொஞ்சம் துன்பங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சொல்வதையெல்லாம் கேட்கும் போது நம்முடைய மனது கொஞ்சம் பதட்டப்படத்தான் செய்யும். அப்படியெல்லாம் எந்த மன பயமும் தேவை கிடையாது. நமக்கு இந்த புத்தாண்டு, நல்லபடியான தமிழ் புத்தாண்டாகத்தான் பிறக்கும். எவ்வளவு சோதனை வந்தாலும் அதை கடக்க கூடிய சக்தியை அந்த முருகப்பெருமான் நமக்கு கொடுத்து விடுவார். இந்த வருடத்தின் இன்னொரு ட்விஸ்ட் என்ன தெரியுமா? இந்த வருடத்தினுடைய தலைவன் யார் தெரியுமா?

செவ்வாய் பகவான். செவ்வாய் என்றாலே வெப்பம் சூடு என்ற பொருளைக் குறிக்கின்றது. இதனால் தான் இந்த ஆண்டு கொஞ்சம் கரடு முரடாக இருக்கும் என்று சொல்கிறார்கள் போல. சரி, செவ்வாய் பகவானுக்கு அதிபதி யாரு. முருகர் தானே. அப்போது நாளைய தினம் இந்த ஆன்மீகம் வழிபாட்டை செய்வதன் மூலம் செவ்வாய் பகவானாலும் நமக்கு நன்மையே நடக்கும்.

- Advertisement -

சித்திரை 1 சஷ்டி வழிபாடு

முருகப்பெருமானை தமிழ் கடவுள் முருகன் என்று சொல்லுவோம். அந்த தமிழ் கடவுள் முருகருக்கு உரிய சஷ்டிதிதியில் இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது. நமக்கு என்ன கவலை? இந்த ஆண்டு நிச்சயம் நல்ல ஆண்டாக தான் இருக்கும். நாளைய தினம் தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, உங்களிடம் இருப்பதிலேயே நல்ல புத்தாடையாக எடுத்து உடுத்திக் கொள்ளுங்கள்.

வழக்கம்போல உங்களுடைய வீட்டில், தமிழ் புத்தாண்டை எப்படி வரவேற்பீர்களோ அதே போல வரவேற்று விடுங்கள். நாளைய தினம் சஷ்டி திதி என்பதால் காலை நேரத்திலேயே பூஜையறையில் முருகப்பெருமானை சிறப்பாக வழிபாடு செய்ய வேண்டும். முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு செவ்வரளி பூக்களை வாங்கி போடவும்.

- Advertisement -

பூஜையறையில் வெற்றிலை மேல் விளக்கு ஏற்றி வைப்பது சிறப்பு. முருகனுக்கு உகந்த நட்சத்திர கோலம் போட்டு, பூஜை அறையில் ஓம் சரவணபவ என்று எழுதி, சின்னதாக அரிசிமாவிலேயே வேல் வரைந்து கொள்ளுங்கள். நம்மை காக்கக்கூடிய கடவுள் கந்தன். அவனுக்கு உரிய வேல் நம் வீட்டில் வரைந்து, இந்த தமிழ் புத்தாண்டை வரவேற்கும் பட்சத்தில், இந்த வருடம் நமக்கு நல்லதே நடக்கும்.

நாளும் கோளும் நமக்கு நன்மை செய்யவில்லை என்றாலும், நாம் நம்பக்கூடிய முருகப்பெருமான் நமக்கு நன்மையை மட்டுமே கொடுப்பார். அந்த நம்பிக்கையில் தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ளப் போகின்றோம். நாளைய தினம் உங்கள் வீட்டு பூஜை அறையில் வேல் வரைய மறந்துடாதீங்க. நாளை நீங்கள் வரையக்கூடிய வேல் அடுத்த வருடம் முழுவதும் உங்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும்.

பூஜை அறையில் முருகப்பெருமானை நினைத்து மேல் சொன்னபடி வழிபாட்டிற்கு தேவையான வேலைகளை எல்லாம் செய்து முடித்து விடுங்கள். பிறகு பூஜை அறையில் நாளை காலையிலேயே கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், ஏதாவது ஒரு பாடலை படித்து முருகப்பெருமானுக்கு உங்களால் முடிந்த நெய்வேத்தியம் வைத்து தீப தூப ஆராதனை காண்பித்து உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வழிபாட்டை காலை நேரத்திலே முடித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: துன்பம் தீர ஆஞ்சநேயர் வழிபாடு

எதற்காக இந்த வழிபாட்டை காலையிலேயே செய்ய வேண்டும் என்று சொல்கிறோம் தெரியுமா. நாளைய தினம் சஷ்டி திதி மாலை 4:30 மணி வரை தான் இருக்கின்றது. ஆகவே காலையிலேயே தமிழ் புத்தாண்டை வரவேற்கும் போது முருகப்பெருமானின் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த குரோதி வருடம் இந்த உலகத்திற்கே நன்மையை கொடுக்க வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து நாளைய தினம் கூட்டுப் பிரார்த்தனை வைக்கும் பட்சத்தில் அந்த முருகப்பெருமான் நிச்சயம் நம் உலகத்தை காத்து ரட்சிப்பார்.

- Advertisement -