- Advertisement -
Homeஆன்மிகம்யோக முத்திரைகள் | Yoga muthirai in Tamilநெகட்டிவ் எண்ணங்கள் போக யோக முத்திரை

நெகட்டிவ் எண்ணங்கள் போக யோக முத்திரை

- Advertisement -

நம் வாழ்க்கையில் என்னதான் முட்டி மோதிக் கொண்டாலும் நடப்பது தான் நடக்கும். விதியானது ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்று, அதை மாற்றி அமைக்க சாதாரண மனிதர்களால் முடியாது. நடப்பவை நல்லவையாகவே நடக்கும் என்று நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடர வேண்டும், அதை விடுத்து விரக்தி கொள்வது அல்லது எதைப் பற்றிய சிந்தனையாவது அதிகமாக செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது, இதை செய்யாதீர்கள்.

மனதில் இருக்கக் கூடிய நெகட்டிவ் எனர்ஜி மற்றும் உடலில் இருக்கும் கெட்ட கழிவுகள், நச்சுக்கள் வெளியேறவும் இந்த யோக முத்திரையை ஒரு 15 நிமிடம் தினமும் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். பொதுவாக யோக முத்திரைகள் மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வந்து நம்மை சாந்தப்படுத்தி, நமக்கு வேண்டியதை தரக்கூடிய அற்புத மருந்தாக செயல்படக் கூடிய ஒன்று.

- Advertisement -

எவ்வளவோ போராட்டத்திற்கு இடையே வாழ்க்கையை நடத்துபவர்கள், ஒரு 15 நிமிடம் உங்களுக்காக தினமும் ஒதுக்குவதில் தவறில்லை. 10 லிருந்து 15 நிமிடம் இந்த முத்திரையில் தியானம் செய்தால் அளப்பரிய பலன்களை நீங்கள் பெறலாம். சக்திமிகு இந்த முத்திரையின் பெயர் என்ன? இதை எப்படி செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த யோக முத்திரைகள் பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

முதலில் யோகா செய்வது போல இரு கால்களையும் மடக்கி தியான நிலையில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். அதிகாலை ஆறிலிருந்து, ஏழு மணி அல்லது மாலை வேளையில் இந்த முத்திரையில் அமருவது நன்மை தரும். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னர் அல்லது ஒரு மணி நேரம் பின்னர் இதை செய்ய வேண்டும். சாப்பிட உடன் செய்வது பலன் தராது.

- Advertisement -

தியான நிலையில் அமர்ந்து கொண்டு கைகளை தளர்வாக இரு மூட்டின் மீதும் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் முத்திரைக்கு வர வேண்டும். இரு கைகளையும் வணக்கம் செய்வது போல கொண்டு வாருங்கள். பின்பு சுண்டு விரலில் இருந்து அடுத்தடுத்த மூன்று விரல்களை ஒன்றுடன் ஒன்று பின்னி கொள்ளுங்கள். ஆள்காட்டி விரல்கள் மட்டும் மேலே பார்த்தபடி அப்படியே இருக்கட்டும். கட்டை விரல் இரண்டினையும் X வடிவம் போல வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான், இதுதான் முத்திரை. இந்த முத்திரையின் பெயர் சேபன முத்திரை ஆகும்.

இதையும் படிக்கலாமே:
கணவன் மனைவி பிரியாமல் இருக்க பரிகாரம்

சேபன முத்திரையை கைகளில் கொண்டு வந்து பின்னர் கைகளை இதயத்திற்கு அருகில் கொண்டு சென்று, முதுகு தண்டுவடத்தை நேராக நிமிர்த்தி அமர்ந்து கொள்ள வேண்டும். 10 லிருந்து 15 நிமிடங்களுக்கு தியான நிலையில் இதே போல் வைத்து, ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டு, மூச்சை மெதுவாக முழுவதுமாக இழுத்து பின்னர் மெது மெதுவாக வெளியில் விட வேண்டும். இது போல தொடர்ந்து 15 நிமிடங்கள் செய்து வர, உடலில் இருக்கும் நச்சு கழிவுகள் அனைத்தும் வெளியேறும், மேலும் மன இறுக்கம், மனப்போராட்டங்கள், தடுமாற்றங்கள் உங்களை விட்டு நீங்கும். அதிகம் யோசிக்க மாட்டீர்கள், தெளிவான சிந்தனை கிடைக்கும். விரக்தியிலிருந்து மீண்டு தன்னம்பிக்கை வளரும். கெட்ட எண்ணங்கள் உங்களை விட்டு மறைந்து நல்ல எண்ணங்கள் மேலோங்கி காணப்படும்.

சற்று முன்