அனைவருக்கும் சுலபமாக கிடைக்கும் இந்த ஒரு செடியை வைத்து பூஜை செய்தால் போதும். குபேரரின் அருள் கிடைத்து வீட்டில் எப்போதும் செல்வ மழை பொழியும்

kubera
- Advertisement -

பணம் என்ற சொல்லுக்கு எவ்வளவு வலிமை இருக்கிறதென்று தெரியுமா? இன்றைய சூழ்நிலையில் பணம் இல்லாமல் எவராலும் வாழ முடியாது. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் நம் கையில் நிரந்தரமாக தங்குவதில்லையே என்று பலரும் புலம்பி கொண்டிருப்பார்கள். எப்படி ஒருவர் நமக்கு மரியாதை கொடுக்கும் பொழுது நாமும் அவருக்கு திருப்பி மரியாதை கொடுக்கிறோமோ அதுபோல தான் பணத்தையும், நகையையும் நாம் எந்த அளவு மரியாதையுடன் கையாளுகிறோமோ அந்த அளவிற்கு நமது வீட்டில் நிரந்தரமாக தங்கிவிடும். இவ்வாறு நாம் சம்பாதிக்கும் பணம் நமது வீட்டில் நிரந்தரமாக குடியிருக்க நமக்கு குபேரரின் அருளும் நிச்சயம் தேவைப்படுகிறது. குபேரரின் அருளை நமது வீட்டிற்குள் கொண்டு வர இந்த ஒரு செடியை வைத்து பூஜை செய்தால் மட்டும் போதும். வாருங்கள் அந்தச் செடி என்ன என்பதனையும் அதற்கான பலன்கள் என்ன என்பதனையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

five-rupee-coins

குப்பைமேனி:
இந்த குப்பைமேனி செடியை பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் இதன் பெயரை வைத்து சிலர் இதனை ஒதுக்குபவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த புனிதமான செடி மகாலட்சுமியின் அம்சம் நிறைந்ததாக இருக்கிறது. இது குப்பைகள் இருக்கும் இடத்தில் கூட சீக்கிரம் துளிர்விட்டு வளரக்கூடியது என்பதால் குப்பை என்பது இதன் பெயரில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் நமது மேனியில் ஏற்படும் பல விதமான தோல் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கிறது. எனவே தான் குப்பைமேனி என்ற பெயர் பெற்றது.

- Advertisement -

வியாழக் கிழமை நாட்களில் வீட்டில் குபேர பூஜை செய்யும் பொழுது இந்த குப்பைமேனி செடியை வைத்து பூஜை செய்வதால் குபேரரின் அருளை எளிதாக நமது வீட்டிற்குள் வரவழைக்க முடியும். மற்றும் வெள்ளிக்கிழமை தினத்தில் எப்பொழுதும் பூஜை செய்யும் வேளையில் இந்த குப்பைமேனி செடியை வைத்து பூஜை செய்வதன் மூலமும் குபேரரின் அருளைப் பெறமுடியும்.

kuberan

அவ்வாறு குபேரரின் அருளைப்பெற வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரையில் காலை 6 முதல் 7 மணிக்குள் குப்பைமேனி செடியை வேருடன் பறித்து கொள்ள வேண்டும். அப்படி காலை சுக்கிர ஓரை நேரத்தை தவற விட்டால் மதியம் 1 முதல் 2 மணிக்குள் வரும் சுக்கிர ஓரை நேரத்தில் அதே போல் வேருடன் பறித்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் குப்பைமேனி செடியை நன்றாக கழுவி விட்டு, ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொண்டு அதனுள் குப்பை மேனி செடியின் வேர் பகுதி மூழ்குமாறு வைத்துவிட வேண்டும். பிறகு இந்த கண்ணாடி குடுவையை அப்படியே பூஜை அறையில் வைத்து எப்பொழுதும் போல வெள்ளிக்கிழமை பூஜை செய்வதுபோல் தீப தூப ஆராதனை காண்பித்து பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களும் பூஜை செய்ய வேண்டும்.

kuppaimeni

இவ்வாறு தொடர்ந்து மூன்று தினங்கள் குப்பைமேனி செடி தண்ணீரில் இருப்பதால் அதன் தெய்வீக சக்திகள் அனைத்தும் அந்த தண்ணீரில் முழுவதுமாக இறங்கி இருக்கும். ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீரில் இருக்கும் குப்பைமேனி செடியை வெளியே எடுத்து வைத்து விட்டு, அந்த தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரம், சிறிதளவு வேப்பிலை, சிறிதளவு ஏலக்காய், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து இதனை நிலை வாசல் படியில் தொடங்கி வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும்.

veppilai-water

பின்னர் குப்பைமேனி செடியை நாம் பணம் வைக்கும் பெட்டியின் மீது வைத்துவிட்டு அது நன்றாக காய்ந்தபின் அதனை ஓடும் நீரில் அல்லது வீட்டிற்கு வெளியில் மற்றவர்களின் கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும். இந்த பூஜையை சிறப்புடன் செய்து வந்தால் குபேர அருள் முழுவதுமாக கிடைத்து நமது வீட்டில் செல்வ மழையே பொழிய ஆரம்பிக்கும்.

- Advertisement -