வியாழக்கிழமை மாலையில் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபட்டால் குபேரரின் பரிபூரண அருள் நமக்கு கிடைத்து செல்வ செழிப்பில் மேலோங்கி திகழ்வோம்.

kubera vilakku
- Advertisement -

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் குபேர பகவான். நாம் செய்யும் நன்மைக்கேற்றவாறு நமக்கு செல்வத்தை வாரி வழங்கும் வள்ளலாக குபேர பகவான் திகழ்கிறார். அப்படிப்பட்ட குபேர பகவானை நாம் முறையாக வழிபட்டோம் என்றால் அவருடைய அருள் நமக்கு பரிபூரமாக கிடைத்து வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் வாழ முடியும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் குபேர பகவானின் அருளை பெறுவதற்கு எந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

வடக்கு திசைக்கு அதிபதியாக திகழக் கூடியவர் தான் குபேர பகவான். இவர் சிவபெருமானின் தீவிர பக்தனாக திகழக்கூடியவர். சிவபெருமானை வழிபட்டதால் தான் அவருக்கு குபேர சம்பத்துகள் அனைத்தும் கிடைத்தது என்று புராணங்கள் கூறுகின்றன. அவருக்கு இருபுறமும் சங்கநிதி பதுமநிதி என்று இருவர் இருக்கிறார்கள். சங்கநிதி என்பது சங்கையும், பருமநிதி என்பது தாமரையும் குறிக்கக்கூடியது.

- Advertisement -

அதனால் குபேர பூஜை செய்யும் பொழுது நாம் தாமரையும், சங்கையும் உபயோகப்படுத்தினால் குபேர பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் குபேர பகவானிடம் இருந்த அனைத்து செல்வங்களும் அழிந்து போன சூழ்நிலையில் குபேர பகவானை நெல்லிக்கனி மரத்தை வைத்து வளர்க்க சிவபெருமான் சொன்னதாகவும், அந்த நெல்லி மரம் வளர வளர அவருடைய செல்வங்கள் வளர்ந்தன என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் இன்றளவும் வீட்டில் நெல்லி மரத்தை வைத்து வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று அனைவரும் சொல்கிறார்கள். ஆதலால் குபேர பகவானுக்கு நெல்லிக்கனி என்பது உகந்த கனியாக கருதப்படுவதால் குபேர பூஜையில் நெல்லிக்கனியையும் வைத்து வழிபட வேண்டும்.

குபேர பகவானுக்குரிய கிழமையாக வியாழக்கிழமை திகழ்கிறது. அதுவும் அவருக்கு மிகுந்த உகந்த நேரமாக கருதப்படுவது மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை. இந்த நேரத்தில் வீட்டில் குபேர தீபத்தை ஏற்ற வேண்டும். குபர பகவானுக்கு ஆதிக்க எண்ணாக 5 கருதப்படுவதால், 5 ரூபாய் நாணயத்தை குபேர விளக்கிற்கு அடியில் வைத்து ஏற்றுவது மேலும் சிறப்பு மிகுந்ததாக இருக்கும். பச்சை நிற திரியை பயன்படுத்தி நல்லெண்ணெய் தீபம் ஊற்றி வடக்கு பார்த்தவாறு குபேர தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு 108 ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து வைத்துக் கொண்டு குபேரரின் மூல மந்திரத்தையோ அல்லது லட்சுமி குபேரரின் மூல மந்திரத்தையோ கூறி அர்ச்சனை செய்யலாம். இந்த மூல மந்திரங்கள் தெரியாதவர்கள் “ஓம் லக்ஷ்மி குபேராய நமஹ” என்ற எளிய மந்திரத்தை 108 முறை கூறி அவருக்கு அர்ச்சனை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: நம்பி கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் கஷ்டப்படுபவர்கள் அமாவாசை அன்று பிரத்யங்கிரா தேவியை இப்படி வழிபட்டால் கொடுத்த பணம் வீடு தேடி திரும்ப வரும்.

இவ்வாறு நாம் வாராவாரம் வியாழக்கிழமை மாலை வேளையில் குபேர விளக்கை ஏற்றி வைத்து குபேரரை மனதார வணங்கி வழிபடுவதன் மூலம் அவர் நமக்கு அனைத்து செல்வ செழிப்பையும் வாரி வழங்குவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -