நம்பி கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் கஷ்டப்படுபவர்கள் அமாவாசை அன்று பிரத்யங்கிரா தேவியை இப்படி வழிபட்டால் கொடுத்த பணம் வீடு தேடி திரும்ப வரும்.

pratyangira
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று ஏற்படவே கூடாது. அப்படி ஏற்பட்டு விட்டால் அதனால் தங்களுடைய மானம், மரியாதை, கௌரவம், சந்தோஷம் என்று அனைத்தையும் இழக்க நேரிடும். இதில் கடனை நாம் கொடுத்தாலும் சரி, கடனை நாம் வாங்கினாலும் சரி இந்த நிலை ஏற்படும். இதை தொழிலாக செய்பவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது. ஆனால் சாதாரண பாமர மக்களாக இருக்கக்கூடியவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற காரணத்திற்காக உதவி செய்யப் போய் அதனால் பல இக்கட்டுகளில் மாட்டிக் கொண்டு விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் அமாவாசை நாள் அன்று எப்படி பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டால் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஜாமின் கையெழுத்து போட்டு பிறருக்கு பணம் வாங்கி கொடுத்து அவர்கள் அந்த கடனை அடைக்காமல் நடுத்தெருவில் நிப்பாட்டி வாழ்க்கையே நிலை குலைந்து போனவர்கள் பலர் இருக்கிறார்கள். தான் சேமித்து வைத்த பணத்தை தனக்காக செலவு செய்யாமல் பிறர் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காக உதவி செய்யப் போய் அந்த பணம் கைக்கு வராமல் கஷ்டப்படுபவர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் கஷ்டங்களை போக்குவதற்கு உதவுபவள் தான் பிரத்யங்கரா தேவி.

- Advertisement -

நாம் ஒருவரிடம் கடன் வாங்கி அந்த கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படும் பொழுது பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் பைரவர் நமக்கு கடன் நிவர்த்தி செய்து நம்முடைய கடனை நாம் அடைப்பதற்கு நல்ல வழியை காட்டுவார். அதேபோல்தான் நமக்கு வரவேண்டிய பணம் நம்மிடம் வந்து சேர்வதற்கு அமாவாசை தினத்தன்று பிரத்தியங்கிரா தேதியை வழிபட வேண்டும்.

இந்த வழிபாட்டிற்கு நமக்கு கருங்காலி கட்டை தேவைப்படும். சிறிய அளவிலாக இருந்தாலும் பரவாயில்லை. அதை வாங்கி வந்து பூஜையறையில் வைத்துக் கொள்ள வேண்டும். அமாவாசை தினத்தன்று பிரத்தியங்கிரா தேவி வீற்றிருக்கும் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு பூசணிக்காய், இரண்டு எலுமிச்சம் பழம் என்று வாங்கிக் கொண்டு போக வேண்டும். அங்கு பிரத்யங்கிரா தேவிக்கு முன்பாக பூசணிக்காயை இரண்டாக வெட்டி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த தீபத்தை நாம் அமாவாசையில் வரும் ராகு காலத்தில் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

2 எலுமிச்சம் பழங்களை பிரத்தியங்கிரா தேவியின் பாதங்களில் வைத்து யார் உங்களுக்கு பணம் தர வேண்டுமோ அவர்களை நினைத்து அவர்களிடம் இவ்வளவு பணத்தைக் கொடுத்திருக்கிறேன் நீதான் அதை வாங்கித் தர வேண்டும் என்று தாயின் பாதங்களில் அந்த எலுமிச்சம் பழங்களோடு உங்கள் வேண்டுதலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு இந்த 2 எலுமிச்சம் பழங்களையும் வீட்டிற்கு எடுத்து வந்து ஒன்றை நிலை வாசலில் கட்டி விட வேண்டும். மற்றொன்றை வீட்டு பூஜை அறையில் இருக்கும் கருங்காலியின் கட்டையின் மேல் வைத்து தினமும் இந்த எலுமிச்சம் பழத்தை பிரத்தியங்கிரா தேவியாக நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

அடுத்த மாதம் வரும் அமாவாசை நாளிலும் ராகு காலத்தில் பூசணிக்காய் தீபம் ஏற்றி இரண்டு எலுமிச்சம் பழங்களை வைத்து வழிபட்டு வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். பழைய எலுமிச்சம் பழங்களை எடுத்து கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறதா? அதை சமாளிக்க முடியாமல் திணறுபவர்கள் குலதெய்வத்திற்கு இளநீரை இப்படி வைத்து வழிபட்டு பாருங்கள். குலதெய்வத்தின் அருளால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

இவ்வாறு நாம் மாதாமாதம் வரும் அமாவாசை நாளில் ராகு காலத்தில் பிரதிங்கிரா தேவியை வழிபடுவதன் மூலம் எண்ணி மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் நம்மிடம் பணம் வாங்கியவரே நம்மை தேடி வந்து பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கான வழியை பிரத்யங்கிரா தேவி காட்டுவார்.

- Advertisement -